districts

கோயம்பேடு மார்க்கெட் ஞாயிற்றுக்கிழமை செயல்படும்

சென்னை, மே 28- வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று சந்தைக்கு வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை (மே 30) கோயம்பேடு மார்கெட் வழக்கம் போல் செயல்படும் என்று  அங்காடி நிர்வாகக் குழு சார்பில் அறி விக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது தளர்வு களற்ற முழு பொதுமுடக்கம் அமலில் உள்ளது. பொதுமக்களின் அத்தியாவசிய தேவைக்காக கோயம்பேடு சந்தையில் காய்கறி, பழம், பூ மார்க்கெட்டில் உள்ள கடை கள் திறக்கப்பட்டு விற்பனை செய்யப்படு கிறது. பகல் 12 மணி வரை கடைகள் செயல்பட  வியாபாரிகளுக்கு அனுமதி அளிக்கப் பட்டுள்ளது. தற்போது சென்னை மாநகராட்சி, உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் வணிகர் சங்கங்கள் இணைந்து மினி வேன், ஆட்டோ, மூன்று சக்கர சைக்கிள்கள் உள்ளிட்ட  நடமாடும் வாகனங்கள் மூலம் பொதுமக்க ளுக்கு காய்கறி பழம் அவர்கள் வசிக்கும்  பகுதிக்கே சென்றே விற்பனை செய்யப்படு கிறது.

தினசரி 3 ஆயிரத்துக்கும் அதிகமான வாகனங்கள் மூலம் சென்னை மற்றும் புற நகர் பகுதிகளில் காய்கறி, பழங்கள் விற்ப னைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் வியாபாரிகள் விடுத்த கோரிக்கையை ஏற்று சந்தைக்கு வார விடு முறை நாளான ஞாயிற்றுக்கிழமை மார்கெட்  வழக்கம் போல் செயல்படும் என்று அங்காடி  நிர்வாகக் குழு சார்பில் அறிவிக்கப் பட்டுள்ளது.   இதுகுறித்து அதிகாரி கோவிந்தராஜன் கூறுகையில்: பொது மக்களின் வசதிக்காக தினசரி நியாயமான விலையில் காய்கறி, பழங்களை வாகனங்கள் மூலம் விற்பனை செய்து வருகிறோம். இதற்கு நல்ல வர வேற்பு கிடைத்துள்ளது. மேலும் பொதுமக்களின் தேவைக்கு ஏற்ப நாளுக்கு நாள் காய்கறி விநியோ கிக்கும் வாகனங்களின் எண்ணிக்கை அதிக ரித்து வருகிறது. இதன் காரணமாக வருகிற  30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோயம்பேடு  சந்தை வழக்கம் போல செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.