அரசின் நூறு நாள்கள் சாதனையை ஒட்டி, தமிழரசு இதழின் சிறப்பு வெளியீட்டை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். இதனை தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு பெற்றுக் கொண்டார். இந்த நிகழ்வில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ், மக்களவை உறுப்பினர் ஆ.ராசா, செய்தித் துறை செயலாளர் மகேசன் காசிராஜன், செய்தித் துறை இயக்குநர் வீ.ப.ஜெயசீலன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.