districts

img

சென்னை மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கல்

தாம்பரம் மாநகராட்சி 61ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி வேட்பாளர் ஆர்.விஜயா வியாழனன்று (பிப்.3) வேட்புமனு தாக்கல் செய்தார். இந்த நிகழ்வில் மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், மாநிலக்குழு உறுப்பினர் க.பீம்ராவ், செயற்குழு உறுப்பினர் பா. பால கிருஷ்ணன், ஜி. செந்தில்குமார், பகுதிச் செயலாளர் தா.கிருஷ்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

***

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் பொன்னேரியை அடுத்த ஆரணி பேரூராட்சி 1ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் பச்சையம்மாள் தேவராஜ் வேட்பு மனு தாக்கல் செய்தார். உடன் மாவட்ட குழு உறுப்பினர் இ.தவமணி உள்ளார்.

***

மறைமலைநகர் நகராட்சி 19வது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பாளர் என்.மகேஸ்வரி வேட்பு மனு தாக்கல் செய்தார். கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சேஷாத்திரி, பகுதி செயலாளர் எஸ்.குணசேகரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

***

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியில் திருவள்ளூர் நகராட்சி 4ஆவது வார்டில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் எம்.உதயநிலா வேட்பு மனு தாக்கல் செய்தார்.  மாவட்டக்குழு உறுப்பினர்  என்.கீதா,  உடனிருந்தார். 

***