தொடர்ந்து பயிர்களை சேதப்படுத்தும் காட்டு யானைகள்
தேன்கனிகோட்டை, ஜன.18- கர்நாடக மாநிலம், பன்னார்கட்டா வனப்பகுதியிலிருந்து 100-க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் முகாமிட்டுள்ளன. இந்த யானைகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து விவசாய நிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. 50 யானைகள் வனப்பகுதியிலிருந்து வெளியேறி திம்மசந்திரம், மேகலகவுண்டனூர், காடுலக்கசந்திரம், தின்னூர் கிராமங்களில் விவசாய நிலங்களில் புகுந்து ராகி அவரை, துவரை, தக்காளி, பீன்ஸ், வெள்ளரிக்காய் ஆகியவற்றை சேதப்படுத்தின. தேன்கனிக்கோட்டை வனப்பகுதியில் 50-க்கும் மேற்பட்ட யானைகள் முகாமிட்டுள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்ததும் வனத்துறையினர் விரைந்து வந்து யானைகளால் சேதமடைந்த பயிர்களை பார்வையிட்டனர். அப்போது சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். யானைகளை கர்நாடக வனப்பகுதிக்குள் விரட்ட வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காவல் வாகனம் கவிழ்ந்து ஓட்டுநர் பலி
கடலூர்,ஜன.18- கடலூர் மாவட்டம், பண்ருட்டி அருகே ராயர் பாளையத்தை சேர்ந்தவர் சதீஷ்குமார் (31) இவர் பண்ருட்டி அனைத்து மக ளிர் காவல் நிலைய காவல் ஜீப் ஓட்டுநராக இருந்தார். காவல் வானத்தை ஓட்டிக் கொண்டு மாளிகை மேடு சென்றுள்ளார். அப்போது கவிழ்ந்ததில் அவ ருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு பண்ருட்டி அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்து வர்கள் ஏற்கெனவே இறந்து விட்டதாக கூறினார். இது குறித்து இவரது மனைவி தேவி கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கிணற்றில் மூழ்கி மாணவர்கள் பலி
கிருஷ்ணகிரி,ஜன.18- தருமபுரி மாவட்டம், காரி மங்கலம் பகுதியை சேர்ந்த வர் பழனி. இவரது மகன் திருப்பதி(19). பொங்க லுக்காக கிருஷ்ணகிரி மாவட்டம், ஆலபட்டியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அங்கு திருப்பதியும், அவரது மாமா மகன் ஹரி ஹரன் (10) என்ற பள்ளி மாண வனுடன் செம்மங்குளி கோட்டையிலுள்ள சின்ன சாமியின் விவசாய தோட்ட கிணற்றில் நீச்சல் பழக சென்றுள்ளனர். அப்போது கிணற்று நீரில் மூழ்கி திருப்பதி மற்றும் ஹரி ஹரன் இருவரும் உயிரி ழந்தார்.