காலமானார்
கடலூர், டிச. 23- மனிதம் அமைப்பின் மாநில நிர்வாகயும், அகில இந்திய வழக்கறிஞர் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான திருமூர்த்தியின் தந்தை ராமையா வெள்ளியன்று (டிச. 23) காலமானார். கடலூர் மாவட்டம், சிறுபாக்கத்தி லுள்ள அவரது இல்லத்தில் வைக்க ப்பட்டிருந்த ராமையா உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.கனகராஜ், மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, மாநிலக் குழு உறுப்பினர் ரமேஷ்பாபு, கடலூர் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் என்.எஸ்.அசோகன், மாதர் சங்கத்தின் மாநில செயற்குழு உறுப்பி னர் மேரி, மாவட்டக் குழு உறுப்பி னர் கலைச்செல்வன், வன்னிஅரசு, கொளத்தூர் மணி, சோமு, தினேஷ் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். சிபிஎம் மாநிலச் செயலாளர் கே.பால கிருஷ்ணன், விசிக தலைவர் தொல்.திரு மாவளவன் ஆகியோர் திருமூர்த்தியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு இரங்கல் தெரிவித்தனர்.
ஆட்சியரிடம் மனு அளிக்க வந்தவர் மயங்கி விழுந்து பலி
கடலூர், டிச. 23- கடலூர் மாவட்டம், காட்டு மன்னார்கோவில் அருகே உள்ள குமாரக்குடியை சேர்ந்தவர் விவசாயி ராஜதுரை (70). இவர் வெள்ளியன்று (டிச. 23) கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைகேட்பு கூட்டத்தில் மனு அளிப்பதற்காக வந்தி ருந்தார். ஆட்சியர் அலுவலக நுழைவு வாயில் அருகே மனு எழுதிவிட்டு, அதனை நகல் எடுப்பதற்காக சென்ற போது திடீரென மயங்கி விழுந்தார். உடனே ஆட்டோ ஓட்டுநர்கள் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். பின்னர், ஆட்சியர் பால சுப்பிரமணியம் தலைமையில் நடந்த கூட்டத்தில், ராமையாவுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆம்னி பேருந்துகள் கட்டண கொள்ளை
வேலூர், டிச.23- கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அரையாண்டு தேர்வு விடுமுறையொட்டி சொந்த ஊர்களுக்கு செல்ல பொது மக்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வேலூரிலிருந்து திருச்சி மதுரை திரு நெல்வேலி நாகர்கோவில் தூத்துக்குடி பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகளில் பகல் நேரத்திலேயே கூட்டம் அதிகமாக இருந்தது. இரவு நேரங்களில் செல்லக்கூடிய அரசு சொகுசு பேருந்துகளில் முன்பதிவு அனைத்தும் நிறைவடைந்து விட்டது. பயணிகள் கூட்டத்தை கருத்தில் கொண்டு கூடுத லாக சிறப்பு பேருந்துகள் எதுவும் தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படவில்லை. இதனை பயன்படுத்திக் கொண்டு ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டண கொள்ளை அடித்து வருகின்றனர். திருநெல்வேலி-நாகர்கோவில் தூத்துக்குடி போன்ற பகுதிகளுக்கு ரூ.3000 வரை ஆம்னி பேருந்துகளில் டிக்கெட் வசூல் செய்யப்பட்டுள்ளது. மேலும் காட்பாடி வழியாக தென் மாவட்டங்களுக்கு செல்லும் வாராந்திர ரயில்களிலும் இடமில்லை. குழந்தைகள் மற்றும் உடைமைகளுடன் பயணிகள் இடம் கிடைக்காமல் திண்டாடியதை காண முடிந்தது.
கடல் சீற்றம்: மீனவ கிராம மக்கள் அச்சம்
கடலூர்,டிச.23- வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதனால் 55 கி.மி. வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் மறு அறிவிப்பு வரும் வரை மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதன் காரணமாக, கடலூர் துறைமுகத்தில் 1-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. கடலூர் மாவட்டத்தில் 49 மீனவ கிராமங்கள் உள்ளன. இவர்கள் விசைபடகு, பைபர்படகு, கட்டுமரம் உள்ளிட்ட 5 ஆயிரம் படகு மூலம் மீன்பிடித்து வருகிறார்கள். வழக்கத்தை விட கடல் சீற்றம் அதிகமாக இருந்தது. சுமார் 30 முதல் 40 அடி வரை கடல் அலை எழும்பி கரைக்கு முன்னோக்கி வந்தது. கடல் சீற்றம் அதிகரிப்பு காரணமாக அச்சத்திலுள்ள மீனவர்கள் கடற்கரையோரம் நிறுத்திய படகுகளை பாதுகாப்பான இடத்துக்கு இழுத்து சென்றனர். எனவே, கடல் அருகே யாரும் செல்லக்கூடாது என்றும் மீன்வளத்துறை எச்சரிக்கை விடுத்து வருகிறது.
அரசு பேருந்து ஜப்தி
செய்யாறு,டிச.23- திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டம் நல்லூர் கிராமத்தை சேர்ந்தவர் லூர்துசாமி. இவர், 2015 ஆம் ஆண்டு நடந்த விபத்தில் படுகாய மடைந்தார். இதுகுறித்து தேசூர் காவல்நி லையத்தில் வழக்குப்பதிவு செய்தனர். லூர்துசாமி இழப்பீடு கேட்டு செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி குமார வர்மன் விபத்தில் எலும்பு முறிவு ஏற்பட்ட லூர்துசாமிக்கு இழப்பீட்டு தொகை யாக ரூ.4 லட்சத்து 40 ஆயிரத்து 30 வழங்க போக்குவரத்து துறைக்கு உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவின்படி லூர்துசாமிக்கு இழப்பீடு தொகை வழங்காததால், செய் யாறு பேருந்து நிலையத்தில் சென்னைக்கு செல்ல இருந்த அரசு பேருந்தை சார்பு நீதி மன்ற ஊழியர்கள் ஜப்தி செய்து நீதிமன்ற த்தில் ஒப்படைத்தனர்.