சாலை தடுப்புச் சுவரில் பைக் மோதி 2 பேர் பலி
அம்பத்தூர், மே 20- பூந்தமல்லி அருகே காட்டுப்பாக்கம் அம்மன்நகர் 9ஆவது குறுக்குத் தெருவைச் சேர்ந்தவர் ரா.தேவா (17). இவரது நண்பர் அதேப் பகுதியைச் சேர்ந்த தினேஷ் (19). இவர்கள் இருவரும் ஒரே மோட்டார் பைக்கில் பரங்கிமலை - பூந்தமல்லி சாலையில் வியாழக்கிழமை காலை சென்று கொண்டிருந்தனர். பைக்கை தேவா, ஓட்டினார். அவர்கள், போரூரில் உள்ள ஒரு தனியார் வங்கி அருகே செல்லும்போது, பைக் திடீரென நிலைதடுமாறி கட்டுப்பாட்டை இழந்தது அங்கிருந்த சாலைத் தடுப்பின் மீது வேகமாக மோதியது. இதில் பைக்கில் இருந்து கீழே விழுந்த இருவரும் பலத்தக் காயமடைந்தனர் உடனே அருகில் இருந்தவர்கள் இருவரையும் மீட்டு மருத்துவமனைக்கு கொண்டுச் செல்ல முயன்றனர். ஆனால் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதுகுறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல் துறையி னர் இருவர் சடலத்தையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக் காக மருத்துவமனக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரு கின்றனர்.
கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்ட 25 திருநங்கைகள்
சென்னை, மே 20- சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி பொது சுகாதாரத் துறை மருத்துவமனையில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக 25 திருநங்கைகள் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். கொரோனா பரவலை தடுக்கும் விதமாக நாடு முழு வதும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந் நிலையில் திருநங்கைகளிடையே தடுப்பூசி செலுத்திவதில் தயக்கம் இருந்து வந்தது. அதனை போக்கும் வகையில் சென்னை நுங்கம்பாக்கம் மாநகராட்சி பொது சுகாதாரத்துறை மருத்துவமனையில் சகோதரன் என்ற திருநங்கைகள் அமைப்பின் சார்பில் 25 திருநங்கைகள் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர். இதன் மூலம் தமிழகத்தில் உள்ள திருநங்கைகளிடையே தடுப்பூசி செலுத்துவதில் நீடித்து வந்த குழப்பம் நீங்கும் என்றும், தடுப்பூசி செலுத்திக் கொள்வதற்கு ஏற்பாடு செய்த தமி ழக அரசுக்கு நன்றி தெரிவித்த திருநங்கைகள் ஜெயா, சுதா ஆகியோர் கொரோனா பரவலை கட்டுப்படுத்த அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள வேண்டும் எனக் கூறினர்.