நாட்டுப்புற கலைஞர்க்கு நிவாரண உதவிகள்
தூத்துக்குடி, மே 23- தமிழன்டா கலைக்கூடம் மற்றும் தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் சார்பில் நாட்டுப்புற கலைஞர்களுக்கு நிவாரண உதவிகளை மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் வழங்கினார். தூத்துக்குடி தமிழன்டா கலைக்கூடம் மற்றும் தமிழ் பண்பாடு மேம்பாட்டு மையம் சார்பில் கீழ ஈரால் கிராமத்தில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் எப்போ தும் வென்றான்,கீழ ஈரால்,தம்பாள்யூரணி உட்பட சுற்று வட்டார கிராமத்தில் வசித்து வரும் 50க்கும் மேற்பட்ட நாட்டுப்புற கலை ஞர்களுக்கு கோவில்பட்டி சென்னை வாழ் நண்பர்கள் பொருளுதவி வழங்கி யதன் பேரில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ் ஜெயக்குமார் தலைமை ஏற்று நாட்டுப்புறக் கலைஞர் களுக்கு அரிசி, பருப்பு உள்ளிட்ட மளிகை சாமான்களை வழங்கினார்.
சேரன்மாதேவியில் கொரோனாவுக்கு கர்ப்பிணி பலி
திருநெல்வேலி, மே 23- நெல்லை மாவட்டம் சேரன்மாதேவி பகுதியை சேர்ந்த 26 வயதான இளம் பெண்ணுக்கு சமீபத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் பாளையங்கோட்டை அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி அந்த இளம்பெண் பரிதாப மாக இறந்தார். கொரோனாவுக்கு பலி யான அந்த இளம்பெண் 8 மாத கர்ப்பி ணியாக இருந்தார் என்பது குறிப்பிடத் தக்கது.
மின்சாரம் பாய்ந்து ஊழியர் உயிரிழப்பு
தூத்துக்குடி, மே 23- தட்டார்மடம் அருகே மின்சாரம் பாய்ந்து மின்வாரிய ஒப்பந்த பணியாளர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப் படுவதாவது: தூத்துக்குடி மாவட்டம், தட்டார்மடம் கிழக்குத் தெருவைச் சேர்ந்த வர் பிரமுத்து மகன் சக்திவேல் (53). இவர் தமிழ்நாடு மின்வாரிய அலுவல கத்தில் ஒப்பந்த பணியாளராக வேலை பார்த்து வந்தார். சனிக்கிழமை அரசூர் கிரா மத்தில் மின் கம்பத்தில் ஏறி பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது எதிர்பாராதவித மாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்தி லேயே உயிரிழந்தார். இதுகுறித்து தட் டார்மடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம் சன் ஜெதாஸ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றார்.
பாளை. சிறை கைதி கொலை வழக்கு: சிபிசிஐடி விசாரணை
திருநெல்வேலி, மே 23- பாளையங்கோட்டை மத்திய சிறை யில் விசாரணைக் கைதி முத்துமனோ கொலை செய்யப்பட்ட வழக்கில், அவரின் பெற்றோரிடம் சிபிசிஐடி போலீஸார் விசா ரணை நடத்தினர். நெல்லை மாவட்டம் நான்குனேரி அருகே மூன்றடைப்பு வாகைகுளம் பகுதி யைச் சேர்ந்தவர் பாபநாசம் மகன் முத்து மனோ(27). விசாரணைக் கைதியாக பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்ட இவர் கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி சிறையில் கைதிகளுக்கி டையே ஏற்பட்ட மோதலில் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து சிபிசிஐடி போலீஸார் இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது சம்பந்தமாக, முத்து மனோவின் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற் கொண்டனர்.இந்த வழக்கில், உயிரிழந்த முத்துமனோவின் குடும்பத்துக்கு உரிய நிவாரணம் வேண்டும், சிறை அதிகாரி கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி இதுவரை முத்துமனோ வின் உடலை உறவினர்கள் பெற்றுக் கொள்ளாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.