75வது சுதந்திர தினமான ஞாயின்று (ஆக.15) இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் துறைமுகப் பகுதிக்குழு சார்பில் ரத்த தான முகாம் நடைபெற்றது. முகாமை மாநில துணைச் செயலாளர் கார்த்தீஸ்குமார் தொடங்கி வைத்தார். மாற்றுத்திறனாளிகள் சங்க மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.மனோன்மணி, வாலிபர் சங்க மாவட்டச் செயலாளர் மஞ்சுளா, துணைத் தலைவர் பார்த்திபன், மாவட்டகுழு உறுப்பினர் வெங்கடேஷ், பகுதி நிர்வாகிகள் மணிமாறன், மகேஷ், கபில், விமல், வேளாங்கண்ணி, சூரிய பிரகாஷ், சந்தோஷ், பிரபா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.