districts

img

காவல் துறை சார்பில் விழிப்புணர்வு முகாம்

வண்ணாரப்பேட்டை பெரிய மார்க்கெட் வியாபாரிகளுக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டி சுகாதாரத்  துறை மற்றும் காவல் துறை சார்பில் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இதில் காவல்துறை ஆய்வாளர் பிராவின் டேனி சபின், உதவி ஆய்வாளர் ராஜா, மண்டலம் 4 செயற்பொறியாளர் விக்டர் ஞானராஜ், உதவி பொறியாளர் மலர், மார்க்கெட் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஷாஜகான், கௌரவத் தலைவர் வெங்கட் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சங்க தலைவர் ஷாஜகான் தடுப்பூசியை முதலாக போட்டுக்கொண்டு முகாமை துவக்கி வைத்தார்.