சென்னை, டிச. 2 - சென்னை உயர்நீதி மன்றத்தின் பயன்பாட்டு மொழியாக தமிழை கொண்டு வர சட்டம் இயற்ற வேண்டும் என்று அகில இந்திய வழக்கறிஞர்கள் சங்கம் தீர்மானம் நிறை வேற்றி உள்ளது. அகில இந்திய வழக்கறி ஞர்கள் சங்கத்தின் 10 வது சென்னை மாவட்ட மாநாடு வியாழனன்று (டிச.1) பாரி முனையில் நடைபெற்றது. இந்த மாநாட்டில், உயர்நீதி மன்ற வளாகத்தில் தொழிற் பாதுகாப்பு படையினரின் (சிஐஎஸ்எப்) பாதுகாப்பை அகற்ற வேண்டும், உயர்நீதிமன்ற, உச்சநீதி மன்ற நீதிபதிகள் நியமனம், இடமாற்றம் ஆகியவற்றில் வெளிப்படைத் தன்மையை உறுதி செய்ய வேண்டும். எனவே, தற்போதுள்ள கொலீஜியம் அமைப்பு முறையை மறுபரிசீலனை செய்து, தேசிய நீதித்துறை நியமன ஆணையம் (என் ஜெஏசி) போன்ற வழி முறையை உருவாக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. வழக்கறிஞர் செல்வ ராஜ் தங்கவேல் எழுதிய ‘வித்அவுட் பியர் ஆர் பேவர்’ நூலும், ‘அரசியல மைப்பு சட்டத்தை பாது காப்போம்’ (கர்நாடக உயர்நீதிமன்ற நீதிபதி நாக மோகன்தாஸ் உரை) எனும் சிறு நூலும் மாநாட்டில் வெளியிடப்பட்டது. ‘மாநில ஆளுநரின் அதிகார வரம்பும், அரசியல் நிர்ணய சபை விவாதங்களும்’ எனும் தலைப்பில் மூத்த வழக்கறிஞர் சிகரம் ச.செந்தில்நாதன் பேசினார். மாநாட்டிற்கு சங்கத்தின் மாவட்டத் தலைவர் கே.சுப்புராம் தலைமை தாங்கினார். துணைச் செய லாளர் எஸ்.ஷினு வர வேற்றார். மாநில செயல் தலைவர் ஏ.கோதண்டம் மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். செயலா ளர் பா.சீனிவாசன் வேலை அறிக்கையையும், பொரு ளாளர் இ.வினோத்குமார் வரவு செலவு அறிக்கையும் சமர்ப்பித்தனர். அகில இந்திய இணைச் செயலா ளர் கே.இளங்கோ நிறைவு ரையாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் சமந்தா நன்றி கூறினார். 25 பேர் கொண்ட மாவட் டக்குழுவின் தலைவராக பி. பாலசுப்ரமணியன், செயலாளராக பா.சீனி வாசன், பொருளாளராக இ. வினோத்குமார் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.