சிதம்பரம், ஜூலை 21- சிதம்பரம் அருகே கீரப்பாளை யம் ஒன்றியத்திற்குட்பட்ட வட ஹரிராஜபுரம் கிராமத்தில் உள்ள அங்கன்வாடி மையத்தில் 20 குழந்தை களுக்கு குரல் வழி கல்வி பயிற்று விக்கப்படுகிறது. அந்த மையத்தின் மேற்கூரை (சிமெண்ட் ஷீட்) உடைந்து சிதலமடைந் துள்ளது. சிறு காற்று அடித்தால் கூட முற்றிலுமாக உடைந்து விழும் அபாய நிலையில் உள்ளது. மின்சாரம், குடிநீர் வசதியின்றி செயல்படுவதால் குழந்தைகள் கடும் சிரமப்படுகின்றனர். குழந்தைகளுக்குச் சமைப்பதற்கு தெருக்களில் உள்ள குடிநீர் குழாயிலி ருந்து தண்ணீர் பிடித்து பயன்படுத்தப் படுகிறது. இதுகுறித்துபலமுறை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.என அந்தப் பகுதி மக்கள் கூறுகின்றனர். எனவே ஏதேனும் அசம்பாவித சம்ப வம் நிகழ்வதற்கு முன் மேற்கூரை களை சீரமைத்து, மின் வசதி, குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதி களை ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.