சென்னை,அக்.5- சென்னையில் வேலை தேடி கொண்டி ருக்கும் பெண்கள் மற்றும் வேலை தேடி வரும் இளம்பெண்களிடம் தனியார் நிறுவனங் களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தை கூறி, அவர் களை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதித்து வருவதாக கிடைத்த தகவலின்படி, சென்னை காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் விருகம்பாக்கம் காவல்துறையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், சாலிகிராமம் சாந்தி காலனி தில்லையாடி வள்ளியம்மை தெரு வில் உள்ள ஒரு வீட்டை காவலர்கள் ரகசிய மாக கண்காணித்து வந்தனர். அப்போது அங்கு ஒரு பெண்ணை அடைத்து வைத்து பாலியல் தொழில் நடத்தி வந்தது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து பெண் காவலர்கள் அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டனர்.இதில் பாலியல் தொழில் நடத்தி வந்த மதுரையைச் சேர்ந்த கார்த்திக்கேயன் (46) மற்றும் திருநெல்வேலியை சேர்ந்த பெனடிக் நெல்சன் (53) ஆகிய இருவரையும் விருகம் பாக்கம் காவல்துறையினர் கைது செய்த னர். மேலும் பாலியல் தொழிலில் கட்டாயப் படுத்தி ஈடுபடுத்தப்பட்ட ஒரு பெண் மீட்கப்பட்டார். இவர்களிடமிருந்து மூன்று செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. அதேபோல் சாலிகிராமம் திருவேங்கட சாமி தெருவில் உள்ள ஒரு வீட்டிலும் பாலியல் தொழில் நடத்தியது குறித்த தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு சோதனை மேற்கொண்ட விருகம்பாக்கம் காவல்துறையினர், பாலியல் தொழில் நடத்தி வந்த அதே பகுதியைச் சேர்ந்த சாந்தி (50), ஈக்காட்டுத்தாங்கலை சேர்ந்த தேவி (38) மற்றும் நெசப்பாகத்தைச் சேர்ந்த சீதாதேவி (34) ஆகிய மூன்று பெண்களையும் கைது செய்தனர். இவர்களின் கண்காணிப்பில் பாலியல் தொழிலில் கட்டாயப்படுத்தி ஈடுபட்டு வந்த ஒரு பெண் மீட்கப்பட்டார். மேலும் இவர்களிட மிருந்து ஆறு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.