வரதட்சணை கொடுமையால் பெண் தற்கொலை
தூத்துக்குடி, ஜூன் 27- தூத்துக்குடி அருகே வரதட்சணை கொடுமையால் மகனை கொன்று பெண் தற்கொலை செய்த வழக்கில் 16 மணி நேரத்தில் கணவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். தூத்துக்குடி மாவட்டம் முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஈச்சாந்தா ஓடை பகுதியை சேர்ந்த லெட்சுமணன் மகன் விக்னேஷ் (27) என்பவரும் காசிலிங்கபுரம் பகுதியை சேர்ந்த செல்லத்துரை மகள் சண்முகசெல்வி (25) என்பவரும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்துள்ளனர். இவர்களுக்கு கமலேஷ் என்ற 3 வயது ஆண் குழந்தை உள்ளது. இந்நிலையில் 25ம்தேதி சண்முக செல்வி மற்றும் அவரது மகன் கமலேஷ் ஆகிய இரு வரும் வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டனர்.
இத்தகவறிந்த மாவட்ட காவல் கண்கா ணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டார். அப்போது சண்முகச் செல்வியின் தந்தை செல்லத் துரை (58) , தன் மகளை, மகளின் கணவரான விக்னேஷ் (27), அவரது அம்மா மல்லிகா (52), அப்பா லெட்சுமணன் (60) மற்றும் அவ ரது அண்ணன் சுரேஷ் (28) ஆகியோர் வரதட்சணை கேட்டு அடிக்கடி கொடுமை படுத்தி வந்ததாகவும், அதனால் தன் மகள் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்ட தாகவும்,இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் புகார் அளித் தார். அவரது புகாரின் பேரில் முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து சண்முகச்செல்வி மற்றும் அவரது மகன் கமலேஷ் ஆகியோரது உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தற்கொலைக்கு தூண்டி யவர்களை விரைந்து கைது செய்ய உரிய நடவடிக்கை எடுக்குமாறு தூத்துக்குடி ஊரக துணை கண்காணிப்பாளர் பொன்னரசு மேற்பார்வையில் முறப்பநாடு காவல் நிலைய ஆய்வாளர் பாஸ்கரன், உதவி ஆய் வாளர் முத்துசுப்பிரமணியன் ஆகியோர் தலைமையில் போலீசார் அடங்கிய தனிப் படைகள் அமைத்து உத்தரவிட்டார். அவரது உத்தரவின் பேரில் தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு தற்கொலை செய்து கொண்ட சண்முக செல்வியின் கணவரான விக்னேஷ், அவ ரது சகோதரர் சுரேஷ் மற்றும் அவரது அம்மா மல்லிகா ஆகியோரை கைது செய்தனர்.