districts

img

சென்னையில் ஆண்டுக்கு 2 லட்சம் மரக்கன்றுகள்: ககன்தீப் சிங் பேடி

சென்னை, ஆக. 19- சென்னை மாநகரை பசுமையாக்க ஆண்டுக்கு 2 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு  திட்டமிடப்பட்டுள்ளதாக சென்னை மாநக ராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறி னார். உலக புகைப்பட தினத்தையொட்டி சென்னையில் பத்திரிகை புகைப்பட கலை ஞர்கள் சங்கம் சார்பில் ராஜீவ் காந்தி சாலை  கூவம் ஆற்றின் கரையோரம் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி வியாழனன்று (ஆக. 19) நடை பெற்றது. இதில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப்சிங் பேடி கலந்து கொண்டு மரக்கன்று களை நட்டார். புகைப்படக் கலைஞர்கள் மரக்கன்றுகளை நடுவதை ஆணையர் கேம ராவில் படமெடுத்து அவர்களை கவுரவப்ப டுத்தினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், சிங்காரச் சென்னை 2.0 திட்டத்தின் மூலம் ஆண்டுக்கு 2 லட்சம் மரங்கள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கூறினார். இதனால் பசுமையும், சுத்தமான காற்றும், குளிர்ச்சியும் கிடைக்கும் என்றார். திருவனந்தபுரம், பெங்  களூருவில் அதிகளவு மரங்கள் இருப்பதைப் போன்று சென்னையிலும் காலியாக உள்ள இடங்களில் பொதுமக்கள் பங்களிப்புடன் மரங்கள் வளர்க்கப்படும் என்று கூறினார். இதில் சங்கத்தின் தலைவர் பி.ஜோதி ராமலிங்கம், செயலாளர் எல்.சீனிவாசன், பொருளாளர் எஸ்.சீனிவாசலு உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.