திருவள்ளூர், ஜூலை 10-
ஊசி, மணி வித்தது போதும் எங்களுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுங்கள் விவசா யம் செய்து பிழைத்து கொள் கிறோம் என நரிக்குறவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் நாரவாரி குப்பம், நரிக்குறவர் காலனி யில் கலைஞர் தெருவில் 55 நரிக்குறவர்கள் கடந்த 3 தலைமுறைகளாக குடியி ருந்து வருகின்றனர். அரு கில் உள்ள செங்குன்றம் பேருந்து நிலையம், அதை யொட்டிய நகரில் ஊசி மணி, மற்றும் கைவினை பொருட்களை விற்று அதில் கிடைக்கும் வருவாய்யை கொண்டு தங்கள் வாழ்க் கையை நடத்தி வருகின்ற னர். மேலும் தங்கள் குழந் தைகளையும் அங்குள்ள பள்ளியில் கல்வி பயின்று வருகின்றனர்.
செங்குன்றம், நாரவாரி குப்பத்தில் புழல் ஏரிக்கரை ஓரம் நரிக்குறவர்கள் குடியிருப்புகள் உள்ளன. அடிப்படைவசதிகளின்றி சுகாதாரமற்ற நிலையில் உள்ளதால், கொசு, தொல்லை, நோய் தொற்று போன்றவையால் பாதிக் கின்றனர். அங்கு போக்கு வரத்து நெரிச்சல் ஏற்பட் டால், செங்குன்றம், திரு வள்ளூர், ஊத்துக்கோட்டை, கும்மிடிப்பூண்டி செல்லும் வாகனங்கள் நரிக்குறவர்கள் குடியிருப்புகள் வழியாகத் தான் செல்லும் நிலை யுள்ளது. இதனால் குழந்தை களோ, பெரியவர்களோ சுமார் 2 மணி நேரம் வீட்டை விட்டு வெளியே வர முடியாத நிலை ஏற்படு வதாகவும், சில நேரங்க ளில் வீட்டின் வெளியே இருப்பவர்கள் மீது வாக னங்கள் மோதிச்செல்லும் சம்பவங்களும் நடப்பதாக வேதனையுடன் கூறுகின்ற னர்.
மார்க்கம் இல்லை
இந்த நிலையில், அடுத்த தலைமுறைக்காவது சொந்த மாக வீட்டுமனை மற்றும் பட்டா , தொகுப்பு வீடுகள் வழங்க வேண்டும். அது வும் அதிகாரிகள் இடத்தை காலி செய்ய உத்தரவிடும் முன்பே அடிப்படை தேவை களை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியரிடம் கடந்த ஆண்டு மனு அளித்துள்ளனர்.
ஆட்சியரோ பொன்னேரி வருவாய்கோட்டாட்சி யரிடம் சென்று மனு கொடுங் கள் என்றதும், அவருக்கும் மனு அளித்தனர். ஆனால் அவரோ இது பெல்ட் ஏரியா என்பதால் பட்டா கொடுக்க முடியாது என கூறியதாக தெரிவித்தனர். இருப்பினும் பூச்சிஅத்திப்பேடு அடுத்து உள்ள கோடுவள்ளி பகுதி யில் பட்டா வழங்குகிறோம் என தெரிவித்துள்ளனர்.
அனைவருக்கும் பட்டா..
ஆனால் பட்டா வழங்க காலதாமதம் ஆவதால் திங்களன்று (ஜூலை 10) கோடுவள்ளியில் குடிமனைப் பட்டா அனை வருக்கும் வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித் துள்ளனர். அப்போது கோடு வள்ளியிலும் குடிமனைப் பட்டா கொடுக்க முடியாது, மேலக்கொண்டையார் பகுதியில் அதுவும் 20 குடும் பத்திற்கு மட்டும் கொடுப் பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
கோடுவள்ளியை அடுத்து 10. கி.மீ தூரத்திற்கு அப்பால் உள்ள மேலக் கொண்டையார் கிராமத்தில் கொடுப்பதாக இருந்தால், குடும்பத்திற்கு 2 ஏக்கர் நிலம் கொடுங்கள் விவசா யம் செய்து பிழைத்து கொள்கிறோம். இனியும் ஊசிமணி, பாசி மணி விற்றது போதும், என முழக் கமிட்டபடி கொண்டு ஆட்சியர் அலுவலகத்தி லிருந்து வெளியேறினர்.
தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ஆர்.தமிழ்அரசு, மாநில துணைத் தலைவர் இ.கங்காதரன் ஆகியோர் தெரிவிக்கையில், நரிக்குற வர் மக்களின் வாழ்வாதார பிரச்சனையில் முதலமைச் சர் உடனே தலையிட்டு கோடுவள்ளியிலேயே அனைத்து குடும்பத்திற்கு குடிமனை பட்டா வழங்க வேண்டும். மேலும் திரு வள்ளூர் மாவட்டத்திலுள்ள நரிக்குறவர்கள் மற்றும் பழங்குடி இன மக்கள் அனை வருக்கும் குடும்பத்திற்கு 2 ஏக்கர் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என வேண்டுகோள் விடுத் துள்ளனர்.