சென்னை,மார்ச் 25- சென்னை நகரின் விரிவாக்கப்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் கடந்த சில வருடங்களாக பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் இந்த பள்ளிகள் இருந்தாலும் கூட அரசு பள்ளிகளாக செயல்பட்டு வந்தது. இத னால் நிர்வாக ரீதியான பிரச்சினை உரு வானது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய வருவாய் மாவட்டங்களை உள்ள டக்கி இந்த பள்ளிகள் செயல்பட்டு வந்தது. சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் உள்ள இத்தகைய பள்ளிகளை மாநகராட்சி பள்ளிகளுடன் இணைக்க வேண்டும் என்று மாமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தினர். அதன் அடிப்படையில் எத்தனை பள்ளிகள் இதுபோன்று உள்ளன என ஆய்வு செய்யப்பட்டது. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் சென்னை மாநக ராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 139 அரசு பள்ளிகள் செயல்பட்டு வருவது கண்ட றியப்பட்டது. அந்த பள்ளிகளை மாநகராட்சி யுடன் இணைக்க வேண்டும் என மன்ற கூட் டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதன்படி 139 அரசு பள்ளிகள் சென்னை மாநகராட்சியுடன் சமீபத்தில் இணைக்கப்பட்டன. அந்த பள்ளிகள் “சென்னை பள்ளிகள்” என பெயர் மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. அங்கு படித்த 35 ஆயிரம் மாணவ-மாணவிகள் தொடர்ந்து கல்வியை தொடர சென்னை மாநகராட்சி அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளது.