தாம்பரம்,டிச.22- சென்னையை அடுத்த மேற்கு தாம்பரம் பகுதியை சேர்ந்தவர் ரவி (வயது 61) என்பவர் தபால்துறையில் வேலை வாங்கித்தருவதாக மோசடி செய்துள்ளார். தாம்பரம் தபால் நிலையத்தில் பணியாற்றியபோது இவர் பொதுமக்களுக்கு வரும் ஓய்வூதிய பணத்தை கையாடல் செய்ததால் பணி நீக்கம் செய்யப்பட்டார். பின்னர் தபால் துறையில் பணியாற்றுவது போல், தபால் துறை பனியனுடன் சுற்றி வந்த அவர், வேலை தேடி வருபவர்களை குறிவைத்து அவர்களுக்கு தபால் துறையில் வேலை வாங்கித் தருவதாக கூறி சுமார் ரூ.1 கோடி வரை மோசடி செய்துள்ளார். இதில் ரூ.4 லட்சம் கொடுத்து ஏமர்ந்த வெங்கடேசன், ரூ.15 லட்சம் கொடுத்து ஏமாந்த பொன்னம்பலம், ரூ.6.30 லட்சம் கொடுத்து ஏமாந்த தனுஷ், ரூ.3.50 லட்சம் கொடுக்க ஏமர்ந்த மூர்த்தி உட்பட சிலர் தாம்பரம் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, புதனன்று தாம்பரத்தில் ரவியை கைது செய்தனர்.