tamilnadu

img

தீபாவளி சீட்டு நடத்தி ரூ.1 கோடி மோசடி

புதுச்சேரி, அக்.26- புதுச்சேரி அருகே வில்லி யனூர் மூலக்கடையில் கடந்த சில ஆண்டுகளாக பலராமன் வயது 48, ஓட் டன்சத்திரம் காய்கறிகடை என்ற பெயரில் பெரிய அள வில் காய்கறி வியாபாரம் செய்து வருகிறார். காய்கறி வாங்க வரும் வாடிக்கையா ளர்களிடம் தீபாவளி சீட்டு நடத்துவதாகக் கூறி குறைந்த பட்சம் ரூ. 500 முதல் ரூ.2 ஆயி ரம் வரை மாதத் தொகையாக வசூலித்துள்ளார். தீபாவளி பண்டிகையின் போது காய் கறி மளிகை பொருட்கள், தங்கம், பட்டாசு, இனிப்பு என பல பொருட்கள் தருவதாக பணம் வசூல் செய்தார். அப்போது ரூ.1 கோடி வரை வசூலித்துள்ளார். தீபாவளி நெருங்கிய தால் பணம் கட்டியவர்கள் பொருட்கள் கேட்டபோது காய்கறி கடைக்கு வருமாறு பலராமன் கூறியுள்ளார். இதையடுத்து, பணம் கட்டி யவர்கள் பொருட்கள் வாங்க காய்கறி கடைக்கு சென்றுள் ளனர். அப்போது காய்கறி கடை பூட்டப்பட்டு இருந்த தைக் கண்டு அதிர்ச்சிய டைந்தனர்.

அவசர வேலையாக பல ராமன் வெளியூர் சென்றி ருக்கலாம் என்று அங்கிருந்து சென்றனர். மீண்டும் காய்கறி கடைக்கு வந்த போது அப் போதும் கடை பூட்டப்பட்டி ருந்தது. பின்னர்தான், பணத்தை மோசடி செய்து விட்டு பலராமன் ஓட்டம் பிடித்து இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து தீபா வளி சீட்டு கட்டி ஏமாந்த வர்கள் அவர் கடை அருகே மறியல் போராட்டத்தில் ஈடு பட்டனர். இதைத்தொடர்ந்து வில்லியனூர் காவல்நிலைய ஆய்வாளர் பழனிவேலு, உதவி ஆய்வாளர் நந்த குமார் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். இது தொடர்பாக புகார் அளித் தால் நடவடிக்கை எடுப்ப தாக உறுதி அளித்தனர். இதையடுத்து மறியல் போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர். தற்போது இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றப்பட் டுள்ளதாக கூறப்படுகிறது.