செங்கல்பட்டு, மார்ச் 3 - மதுராந்தகம் நகராட்சியில் மூன்றாவது முறையாக திமுக வைச் சார்ந்த மலர்விழிக்குமார் நகர்மன்றத் தலைவராக தேர்வு செய்யப்படவுள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் நகர மன்றத் தேர்த லில் மூன்றாவது முறையாக பெரும்பான்மையுடன் நகர மன்றத்தை திமுக பிடித்ததுள்ளது. திமுக. 2006ம் ஆண்டுநடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் 24 வார்டுகளில் 15 உறுப்பினர்க ளுடன் திமுககைப்பற்றியது. மலர்விழி குமார் திமுக நகரமன்ற தலைவராக அப்போது தேர்வு செய்யப்பட்டார். 2011 - 2016 ல் நடைபெற்ற தேர்தலில் இரண்டாவது முறையாக நகரமன்ற தலை வராக மலர்விழி குமார் தேர்வு செய்யப் பட்டார். அப்போதும் 15 உறுப்பினர்கள் தேர் வாகினர். தற்போதுநடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் 24வார்டுகளில் 19 இடங்களை திமுக கைப்பற்றியது. 24 வார்டு களில் போட்டியிட்ட அதிமுக 2 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது.சுயேச்சை வேட்பாளர்கள் 3 வார்டுகளில் வெற்றிபெற்று உள்ளனர். மூன்றாவது முறையாக மதுராந்தகம் நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ள நிலையில் மீண்டும் நகரமன்ற தலைவர் வேட்பாளராக மலர்விழி குமாரை திமுக அறிவித்தது. செங்கல்பட்டு நகராட்சிக்கு தேன் மொழிநரேந்திரன், மறைமலைநகர் நகராட் சிக்கு சண்முகம், நந்திவரம்கூடுவாஞ்சேரி நகராட்சிக்கு எம்.கே.டி.கார்த்திக் ஆகியோர் தலைவராக போட்டியிடுவார்கள் என திமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது. இதே போன்று செங்கல்பட்டு மாவட்டத்திலுள்ள திருப்போரூர் பேருராட்சியின் தலைவராக தேவராஜ், திருக்கழுக்குன்றம் பேரூராட்சிக்கு து.யுவராஜ், இடைக்கழிநாடு பேருராட்சி தலைவராக லட்சுமி சங்கர், அச்சிறுபாக்கம் பேரூராட்சி தலைவராக நந்தினி கரிகாலன்,கருங்குழி பேரூராட்சி தலைவராக தசரதன் ஆகியோர் போட்டியி டுவார்கள் என திமுக தலைமை அறிவித் துள்ளது.