செங்கல்பட்டு, மார்ச் 17 – செங்கல்பட்டில் அமைக் கப்பட்டுள்ள தடுப்பூசி மையத்தை ஏற்று செயல்படுத்திட ஒன்றிய அரசிடம் தொடர்ந்து பேசி வருவதாகவும் விரைவில் நல்ல முடிவை எதிர்பார்ப்ப தாகவும் அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித் துள்ளார். செங்கல்பட்டு மாவட்டத் திற்கு உட்பட்ட அரசுத்துறை நிர்வாக அலுவலகங்கள் திறப்பு விழா அமைச்சர் தா.மோ.அன்பரசன் தலைமையில் செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடை பெற்றது. மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிர மணியன் கலந்துகொண்டு கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், செங்கல் பட்டில் ரூபாய் 65 கோடி யில் கட்டப்பட்டுள்ள சர்வதேச யோகா மற்றும் நேச்சுரோபதி கல்வி நிறுவன கட்டடத்தை விரை வில் தமிழக முதல்வர் திறந்து வைக்கவுள்ளார். அதேநா ளில் அரசு சட்டமன்றத்தில் அறிவித்த சென்னையில் அமையவிருக்கும் சித்ததா பல்கலைக்கழகம் துவக்கி வைக்கப்படவுள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவ மனைக்கான தலைக்காய சிகிச்சை பிரிவு துவங்குவ தற்கு நிதி வரும் பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக் கப்படும். செங்கல்பட்டில் அமைந் திருக்கும் ஒன்றிய அரசுக்கு சொந்தமான தடுப்பூசி தயாரிக்கும் நிறுவனத்தை தமிழக அரசு ஏற்று நடத்த அனுமதிக்கமாறு ஒன்றிய அரசுடன் ஐந்துக்கும் மேற்பட்ட முறை பேச்சு நடத்தியிருக்கிறோம். இதில் முன்னேற்றம ஏற்பட்டுள்ளது என்றார்.