அரியலூர், நவ.9 - அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே வெத்தியார் வெட்டு கிராமத்தை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி விஜய் பிர காஷ் (28). இவரது மனைவி அபிராமி (21). இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒன்றரை வய தில் அகிலேஷ் என்ற மகன் உள்ளார். மேலும் அபிராமி 5 மாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த நவ.3 ஆம் தேதி அபிராமி வீட்டில் சமைத்துக் கொண்டிருந்த போது, தண்ணீ ரில் விளையாடிய மகனை அடித்தாக கூறப் படுகிறது. இதனால் மாமனார் கலியமூர்த்தி, மாமியார் வசந்தா ஆகியோர் அவரை திட்டி யுள்ளனர். இதனை கணவனிடம் அபிராமி கூறியுள்ளார். அதற்கு கணவனும் அபிராமி யை அடித்துள்ளார். இதனால் வேதனையடைந்த அபிராமி உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட் டது. 95 சதவீத தீக்காயத்துடன் அபிராமி உயிருக்கு ஆபத்தான நிலையில் தஞ்சை மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். பின்னர் அபிராமி, அவரது அம்மா விடம் நடந்ததை கூறியுள்ளார். இதுகுறித்து அபிராமியின் தாய் பார்வதி, போலீசாரிடம் அபிராமியின் வாக்குமூலத்தை கூறினார்.
அந்த வாக்குமூலத்தில், “மாமனார் கலியமூர்த்திதான் அபிராமி மீது மண் ணெண்ணெய்யை ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் அபிராமியின் உடல் முழுவதும் எரிந்துள்ளது. இதனை பார்த்த அவரது கணவன் விஜய் பிரகாஷ் சாக்கை எடுத்து அபிராமி மீது போட்டு தீயை அணைத்துள் ளார்” என தெரிவித்துள்ளார். இருப்பினும் போலீசார் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் ஜெயங்கொண்டம் ஒன்றி யச் செயலாளர் எம்.வெங்கடாசலம், மாவட்ட குழு உறுப்பினர் எஸ்.மீனா, அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்க மாவட்டத் தலை வர் பி.பத்மாவதி, மாவட்ட செயலாளர் டி.அம்பிகா, மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.மணியம்மாள், ஒன்றிய செயலாளர் எம்.சிவசங்கரி ஆகியோர் மீன்சுருட்டி காவல் நிலையத்திற்கு சென்றனர். அவர்கள் காவல் ஆய்வாளரிடம் நடந்த வற்றை கூறி, கணவர் விஜய் பிரகாஷ், மாம னார் கலியமூர்த்தி, மாமியார் வசந்தா ஆகிய மூவரையும் கைது செய்ய கோரி பெரும் வாக்குவாதம் நடத்தினர். பிறகு மூவர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதனையடுத்து, இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றினர். முன்பே மாமனார் கலியமூர்த்தியை மீன்சுருட்டி போலீசார் கைது செய்திருந்த நிலையில், தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றுவந்த அபிராமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர், அபிராமியின் கணவர் விஜய் பிரகாஷை கைது செய்து விசாரணை மேற்கொண்ட போது, அவர் காவல் நிலை யத்தின் கழிவறையில் இருந்த ஆசிட்டை (லைசால்) எடுத்து குடித்துள்ளார். போலீ சார் விஜய்பிரகாஷை ஜெயங்கொண்டம் மருத்துவமனையில் சேர்த்து, பின்னர் கைது செய்து விசாரணை மேற்கொண்டனர்.