districts

கொரோனா கால சிறப்பு ஊக்கத்தொகை கோரி ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் ஆட்சியரிடம் மனு

அரியலூர், ஜன. 10 - அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சுமித் தூய்மை பணியாளர்கள், (ஒப்பந்த பணியாளர்கள்), ஒப்பந்த அடிப்படையில் முன்களப் பணியாளர்களாக பணிபுரிந்து வருகிறோம். நாங்கள் கடந்த 2020 கொ ரோனா முதல் அலை, 2021  இரண்டாம் அலை ஏப்ரல், மே, ஜூன் (மூன்று மாதங் கள்) பேருந்து நிறுத்தம், போக்குவரத்து இல்லாத  காலத்திலும் பணிபுரிந்து வந்ததாகவும், நாங்கள்  எங்களின் உடல்நலம் பாதித்த நிலையிலும் அயராது பணிபுரிந்துள்ளோம்.  மேலும் 13.12.2021 (திங்கள்கிழமை) அரிய லூர் மாவட்ட அரசு மருத்துவ மனை உதவி பணி தொழி லாளர்களுக்கு (சுமித் நிர்வாக) தமிழக அரசு வழங் கிய கொரோனா ஊக்க தொகை ரூ.15,000 அனைத்து தொழிலாளர்களுக்கும், அவ ரது வங்கி கணக்கில் வரவு  வைக்கப்பட்டுள்ளது. எனவே கொரோனா கால சிறப்பு ஊக்கத்தொகையை எங்க ளுக்கும் வழங்க ஆவன செய்யுமாறு பணிவுடன் கேட்டுக் கொள்வதாக கூறி,  ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு ஆய் வுக்கு வந்த மாவட்ட ஆட்சிய ரிடம் சுமித் பணியாளர்கள் மனு அளித்தனர்.  மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.