வேலூர்,ஏப்.9- இந்திய அளவில் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் வேலூர் விஐடி கல்வி நிறுவனம் இடம்பித்திருக்கிறது. உலகம் முழுவதும் உள்ள பல்வேறு நாடுகளில் உள்ள கல்வி நிறுவனங்கள் அதன் கல்வித்தரம், மாணவர் ஆசிரியர் விகிதம், ஆசிரியர்கள் பெற்ற விருது கள், சாதனைகள் உள்ளிட்ட காரணிகளின் அடிப்படையில் தரம் பிரித்து ஆண்டுதோறும் சர்வதேச அளவில் சிறந்த கல்வி நிறுவனங்களில் தரவரிசை பட்டியலை க்யூ.எஸ் என்ற சர்வதேச நிறுவனம் வெளி யிட்டு வருகிறது. முக்கியமாக கலை, பொறி யியல் & தொழில்நுட்பம், லைஃப் சயன்ஸ், மருத்துவம், இயற்கை அறிவியல், சமூக அறிவியல் மற்றும் மேலாண்மை போன்ற 5 பாடப்பிரிவுகளில் ஆண்டு தோறும் உலக அளவில் உள்ள பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்து க்யூ.எஸ் அமைப்பு தர வரிசை பட்டியலை வெளியிட்டு வருகிறது. இந்த வருடம் க்யூ.எஸ் அமைப்பு வெளியிட்ட தரவரிசைப் பட்டியலில் உலக அளவில் உள்ள பல்கலைக்கழகங்களில் பொறி யியல் மற்றும் தொழில் நுட்பத்தில் உலக அளவில் விஐடி 346 வது இடம் பிடித்துள்ளது. விஐடி கடந்த ஆண்டை விட 55 இடங்கள் முன்னேறியுள்ளது. அதேபோல் தேசிய அளவில் 9வது இடத்தைப் பிடித்துள்ளது. மேலும் க்யூ. எஸ் பட்டியலில் விஐடியின்7 பாடப்பிரிவுகள் பட்டியலில் இடம் பிடித்துள்ளது. கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஃபர்மேஷன் சிஸ்டம் மற்றும் எலக்ட்ரிக்கல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் பொறியியல் பாடப்பிரிவுகள் தேசிய அளவில் தரவரிசை பட்டியலில் 8 ஆவது இடமும் பிடித்திருக்கிறது. கம்ப்யூட்டர் சயின்ஸ், இன்ஃ பர்மேஷன் சிஸ்டம் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் பாடப்பிரிவு கடந்த ஆண்டை விட 50 இடங்கள் முன்னேறியிருக்கிறது. க்யூ.எஸ் அமைப்பானது வருடா வருடம் பாடப்பிரிவுகள் ஆய்வு செய்து உலக அளவில் எந்தெந்த பல்கலைக்கழகங்களில் உள்ளது என்பதை மாணவர்கள் எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். ஆராய்ச்சிக் கட்டுரைகள் உடன் உலக அளவிலுள்ள நிறு வனங்களின் ஆய்வு மற்றும் கல்வி யாளர்கள் தரவரிசை பட்டியலை வெளியிடுவதில் முக்கிய இடம் பிடித்துள்ளனர். க்யூ.எஸ் அமைப்பு இந்த வரு டம் பாடப்பிரிவுகள் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற இன்டர்நேஷனல் ரிசர்ச் நெட்வொர்க் முக்கிய பங்கு வகிக்கிறது. 2021 ஆண்டு ஷாங்காய் தர வரிசைப் பட்டியலில் தேசிய அள வில் விஐடி 9-ஆம் இடத்தைப் பிடித்துள்ளது அதேபோல் இந்திய அளவில் சிறந்த ஆராய்ச்சி கல்வி நிறுவனத்தின் தரவரிசைப் பட்டியலில் விஐடி 12ஆம் இடத்தில் உள்ளது. இந்திய அரசின் இன்ஸ்டி டியூட் ஆஃப் எமினன்ஸ் என்ற அங்கீகாரத்தை விஐடிக்கு வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.