வேலூர். ஜூன் 5 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குடியாத்தம் சைன குண்டா கிளை முன்னாள் செயலாளரும், விவசாயிகள் சங்கத்தின் மாவட்டக்குழு உறுப்பினருமான எஸ்.ஈஸ்வரன் செவ்வாயன்று மரணம் அடைந்தார்.
அவரதுஇல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு சிபிஎம் வேலூர்- திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் எஸ்.தயாநிதி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.சாமிநாதன், செ.ஏகலைவன், பி.காத்தவராயன், கே.ஜே.சீனிவாசன், மாவட்ட குழு உறுப்பினர் பி.குணசேகரன், குடியாத்தம் தெற்கு தாலுகா செயலாளர் சி.சரவணன் கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர்.