சிஐடியு வேலூர் மாவட்ட 13ஆவது மாநாட்டையொட்டி ஏ.பாபு நினைவு ஜோதி பயணம் ராணிப்பேட்டை முத்துக்கடை பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டது. கட்டுமான சங்கத்தின் தாலுகா செயலாளர் என்.ரமேஷ் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் துணைத் தலைவர் என்.காசிநாதன், போக்குவரத்து ஊழியர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.