districts

img

திருவில்லிபுத்தூர் எல்ஐசி சந்திப்பில் ஒளிரும் விளக்கு எச்சரிக்கை பலகை இல்லாததால் தொடரும் விபத்து

திருவில்லிபுத்தூர்,பிப்.9- திருவில்லிபுத்தூர் எல்ஐசி சந்திப்பு பகுதியில் சென்டர் மீடியனில் ஒளிரும் விளக்கு மற்றும் எச்சரிக்கை பலகை இல்லாததால்  வாகனங்கள் விபத்தில் சிக்குவது தொடர்ந்து நிகழ்கிறது.  திருவில்லிபுத்தூர் தேசிய நெடுஞ்சாலை வழியாக இராஜபாளை யம், தென்காசி, குற்றாலம், செங் கோட்டை, கொல்லம் உள்ளிட்ட முக்  கிய நகரங்களுக்கு அதிக அளவு வாகனங்கள் செல்கின்றன. அதே போல் இராஜபாளையம் பகுதியில் இருந்து மதுரை மாவட்டம் கல்லுப் பட்டி, பேரையூர், திருமங்கலம்  உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் திருவில்லிபுத்தூர் வழியாக செல்கின்  றன. மேலும் கேரளாவுக்கு பொருட் களை ஏற்றி செல்லும் கனரக வாக னங்கள் 24 மணி நேரமும் இவ்வழி யே சென்று வருகின்றன. இந்நிலையில் திருவில்லிபுத்தூர் எல்ஐசி சந்திப்பு அருகே சாலை யின் நடுவே உள்ள  சென்டர் மீடி யினில் டேஞ்சர் விளக்குகள் பொருத் தப்படாததால் இரவு நேரங்களில் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் தொடர்ந்து விபத்தில் சிக்குகின்றன.     இந்நிலையில் திங்கள்கிழமை இரவு ஆலங்குளம் பகுதியில் இருந்து கரூர் பகுதிக்கு சுண்ணாம்பு பவுடர் ஏற்றி வந்த லாரி சென்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது. இத னால் தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 2 ஜேசிபி இயந்தி ரங்கள் மூலம் லாரி மீட்கப்பட்டது. விபத்துக்களை  தவிர்க்கும் வகை யில் சென்டர் மீடியன் உள்ள இடங்க ளில் அதிக அளவு ஒளிரும் விளக்கு களை பொருத்த வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.