districts

img

ஆளுநருக்காக அகற்றப்பட்ட வேகத்தடை மீண்டும் அமைக்கப்படுமா?

சின்னாளபட்டி ஜூலை 3- திண்டுக்கல் மாவட்டம் அமையநாயக்கனூரில், அறுபதாண்டு பழமையான ஊராட்சி ஒன்றியத் துவக் கப் பள்ளி உள்ளது. மாலை யகவுண்டன்பட்டி, செட்டி யபட்டி, பொட்டிகுளம், இந்  திரா நகர், கொடைரோடு, உச்சினம்பட்டி, ராஜதானிக்  கோட்டை, இடையபட்டி உள் ளிட்ட பல்வேறு கிராமங்க ளைச் சேர்ந்த 300 மாணவர் கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின் பின்புறம் கொடைரோடு-நிலக்கோட்டை பிரதான சாலை செல்கிறது. வாகன போக்குவரத்து அதி கம் காரணமாக மாணவர்கள் நலன் கருதி இரு வேகத்தடை கள் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த மாதம் தமிழக ஆளுநர் கொடைக்கானல் வருகையின் போது வேகத் தடை அகற்றப்பட்டது. ஒரு  மாதம் ஆகியும் மீண்டும்  வேகத்தை அமைக்கப்பட வில்லை. வேகத்தைக் குறைக்காமல் கடந்து செல்  லும் வாகனங்களால் கடந்த சில தினங்களாகச் சிறு சிறு விபத்துக்கள் நடந்துள்  ளது. பெரும் விபத்துக்கள்  ஏற்படும் முன், நெடுஞ்சா லைத் துறையினர் ஏற்கனவே அமைக்கப்பட்டிருந்த வேகத் தடையை மீண்டும் அமைக்க வேண்டுமெனப் பெற்றோர்கள்-ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தற்போது ஆசிரியர்கள் போக்குவரத்துக் காவலர்  களாக மாறி மாணவர்கள் பாதுகாப்பாகச் சாலையைக் கடக்க உதவி செய்கின்றனர்.

;