districts

img

வ.உ.சி உரமேற்றிய தொழிலாளர்கள் உயிரைப் பணயம் வைத்து நடத்திய போராட்டம்

1908 மார்ச் 12 அன்று வ.உ.சி கைது செய்யப்பட்டதை எதிர்த்து மறு நாளே தூத்துக்குடி பெஸ்ட் அன்ட் கோ தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தார்கள். அவர் களைத் தொடர்ந்து பர்மா செல்  தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். தூத்துக்குடி கோரல் ஆலை (இன்றைய மதுரா கோட்ஸ்) தொழி லாளர்கள் மார்ச் 14 ல் துவக்கிய வேலைநிறுத்தம் மக்கள் போராட்ட மாக வெடித்தது. கூட்டம் கூட்டமாக  வீதிகளில் வலம் வந்த போராட்டக் காரர்கள் ஆங்கிலேயர்களைப் பார்த்து வந்தே மாதரம் என்று முழக்கமிட்டார்கள். நகரெங்கும் போராட்ட நெருப்பு பற்றி எரிந்தது. அஞ்சி நடுங்கிய ஆங்கிலேயர்கள் தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள பிரிட்டிஷ் நேவிகேசன் கம்பெனிக்குள்ளும், கடலில் நங்கூரமிட்டிருந்த கப்பல்களிலும் குடும்பத்தோடு பதுங்கிக் கொண்டார்கள். அவர்களுக்கு பொருட்கள் வழங்க வியாபாரிகள் மறுத்து விட்டார்கள். வண்டியில் ஏற்றிச் செல்ல குதிரை வண்டிக்காரர்கள் மறுத்தார்கள். ஆங்கிலேயனுக்கு மட்டுமல்ல;  அவர்களை ஆதரித்த சில இந்தி யர்களுக்கும்  சவரம் செய்ய  நாவி தர்கள் மறுத்து விட்டார்கள். நகர  சுத்தி தொழிலாளர்கள், கசாப்பு கடைக்காரர்கள்,சலவைத் தொழி லாளர்கள் என எல்லா தொழி லாளர்களும் போராட்டக் களத்தில் நின்றார்கள் என்பது ரத்த நாளங் களை சூடேற்றும் வரலாறு. அந்த வீர வரலாற்றின் விழு மியங்களை சுமந்து நிற்கும் தூத்துக் குடி மக்கள் அநீதிக்கு எதிராக போர்க்களத்தில் எப்போதும் முன்வரி சையில் தான்நிற்கிறார்கள். ஸ்டெர்லைட் நச்சுத்தொழிற்சாலை யை அகற்று என்று போராடிய போது களப்பலியான 13 பேரும் முகத்திலும் மார்பிலும் துப்பாக்கிக் குண்டுகளை வாங்கியது அதனால் தான்.

முதல் அரசியல் வேலைநிறுத்தம்

வ.உ.சி கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து 1908 மார்ச் 14-ல் இந்தி யாவின் முதல் அரசியல் வேலை நிறுத்த வரலாறு படைத்த தூத்துக்குடி 114 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அந்த வரலாற்றை புதுப்பித்திருக்கிறது. இம்முறை ஒன்றிய ஆட்சி யாளர்கள் - தொழிலாளர்களை நவீன  கொத்தடிமையாக மாற்றும் கொடூர சட்டங்களை இயற்றியதும், சுதேசி முழக்கமிட்ட வ.உ.சி.யின்  தேசத்தில் சுயசார்பின் அடை யாளங்களாக திகழும் பொதுத் துறை நிறுவனங்களை திட்டமிட்டு தனியாருக்கும் அந்நியருக்கும் தாரை வார்க்கும் துரோகத்துக்கு எதி ராகவும் நாடு தழுவிய இரண்டுநாள் வேலைநிறுத்தத்தை  வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருந்தார்கள் வ.உ.சி துறைமுக தொழிலாளர் கள். அதிகாலை ஐந்து மணிக்கே  தொடங்கிய வேலைநிறுத்தத்தில் ஒட்டுமொத்த தொழிலாளர்களும் பங்கேற்று யாரும் துறைமுகத்துக் குள் நுழைய முடியாத நிலையை உருவாக்கி இருந்தார்கள் வ.உ.சி யின் வாரிசுகள்.

கப்பல்களை இயக்கும் முயற்சி, தொடர்ந்த வண்ணம் இருந்த போது துறைமுகத்தின் நுழை வாயிலில் கொளுத்தும் வெயிலில் காவலுக்கு நின்ற போராளிகள் எந்தப் பணியும் நடைபெறாமல் தடுத்து  நிறுத்தினார்கள். வேலை நிறுத்தத்தை  பலவீனப்படுத்தும் முயற்சிகள் அனைத்தும் தோற்றுப் போன நிலையில், ஆள் படைபலம் மூலம் தொழிலாளர்களை பணி யவைத்து விடலாம் என்று தப்புக்  கணக்கு போட்ட சில அதிகாரிகள் ஆயுதம் தாங்கிய தொழில் பாது காப்பு படையினரின் துணையோடு, துறைமுகத்தில் கட்டப்பட்டிருந்த கப்பல் ஒன்றை இயக்க முயற்சி செய்தார்கள். ஆவேசமாக போரா டிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் விடுத்த எச்சரிக்கையை மீறி கப்ப லை கட்டியிருந்த கயிற்றில் ஒன்று அவிழ்க்கப்பட்டது தான் தாமதம்; சரவணன் என்ற தொழிலாளி கடலில் குதித்து கப்பலை இயக்கும் புரப்பெல்லரை நோக்கி நீந்தினார். அடுத்த கனமே கனகராஜ், மாரிச் சாமி என்ற இரண்டு தொழிலாளர்கள் குதித்தார்கள். ஜெயராஜ், குருசாமி என்ற இரண்டு தொழிலாளர்கள் கப்பலின் மறு பக்கம் குதித்தார்கள். கரையில் நின்ற 50 தொழி லாளர்கள் தாங்களும் குதிக்கப் போகிறோம் என்று தயாரானார்கள். தொழிலாளர்கள் உயிருக்கு ஏதேனும் ஆபத்து ஏற்பட்டால் நீங்கள் தான் பொறுப்பு என்று வேலை நிறுத்தத்தை  தலைமையேற்று நடத்திக் கொண்டிருந்த அனைத்து தொழிற்சங்க போராட்டக்குழு தலைவர்களும் தொழிலாளர்களும் அதிகாரிகளை எச்சரித்தார்கள்.

அதுவரை ஆணவத்தோடு நின்ற அதிகாரிகள் திகைத்து பின்வாங்கி னார்கள். பின்பக்கம் 3பேர், முன்பக்கம் இரண்டு பேர் குதித்து கப்பலை முற்றுகையிட்டதால் கப்ப லை இயக்கும் கேப்டன் செய்வதறி யாமல் திகைத்து நின்றார். ஒரு வேளை அவர் கப்பல் புரப்பெல்லரை இயக்கி இருந்தால் கப்பலின் முன்னும் பின்னும் முற்றுகையிட்ட தொழிலாளர்களின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டிருக்கும். இத்தகைய ஆபத்தை எதிர்நோக்கியே தொழிலாளர்கள் போராட்டத்தில் குதித்தார்கள். இந்தப் போராட்டம் மூல தனத்தின் கொடூர தாக்குதலை எதிர்கொள்ள தொழிலாளர்கள் தங்கள் உயிரையும் பணயம் வைத்து எந்த எல்லைக்கும் போவார்கள் என்ற எச்சரிக்கையை ஆட்சியாளர் களுக்கு விடுத்தது. வ.உ.சி முன்னெடுத்த அதே  போராட்ட உணர்வோடுதான் தொழி லாளர்கள் இன்றும் போராடு கிறார்கள். ஆட்சியாளர்களும் அன்றும் இன்றும் அதே வடிவத்தில் தாக்குதலை நடத்திக் கொண்டே இருக்கிறார்கள். அப்போது ஆண்ட வர்கள் அந்நியர்கள்; இப்போதோ  அன்னியர் நலனை மூளை முழு வதும் நிரப்பியுள்ள இந்தியர்கள் என்பது மட்டுமே வித்தியாசம்!

;