districts

img

மதுரையில் விவசாயிகள் போராட்ட வெற்றி பேரணி

கடந்த ஓராண்டாக விவசாயிகள் நடத்திய வீரஞ்செறிந்த போராட்டத்திற்கு பணிந்து மோடி அரசு விவசாயிகள் விரோத வேளாண் சட்டங்களை ரத்து செய்தது. அந்த போராட்ட வெற்றியைக் கொண்டாடும் வகையில்   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில்  பெரியார் பேருந்து நிலையம் கட்டபொம்மன் சிலை அருகில் இருந்து நேதாஜி சிலை வரை பேரணி நடைபெற்றது. பேரணிக்கு கட்சியின் மாவட்டச் செயலாளர் மா. கணேசன் தலைமை வகித்தார். மாநி லக்குழு உறுப்பினர்கள் இரா. விஜயராஜன், வாலண்டினா, எஸ். கே.  பொன்னுத்தாய், எஸ். பாலா மற்றும்  மாநகர், புறநகர் மாவட்ட  செயற்குழு உறுப்பினர்கள், பகுதிக்குழு  செயலா ளர்கள் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.