இராஜ பாளையம்,ஜன.27- விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் அருகே உள்ள தளவாய்புரம் பகுதி யில் பிடி டெக்ஸ் என்ற பெய ரில் ஏழு பேர் சேர்ந்து பங்கு தாரர்களாக டெக்ஸ்டைல்ஸ் நடத்தி வருகின்றனர் .அதில் சிட்பண்ட்டும் நடத்தி வந்துள்ளனர். இவர்கள் கடந்த 40 ஆண்டு காலமாக அப்பகுதி யில் உள்ள பொது மக்களி டம் சீட்டு பணம் வசூல் செய்துள்ளனர். இந்த நிலை யில் கடந்த ஓராண்டு கால மாக 85 நபர்களுக்கு மேல் 10 கோடி ரூபாய் வரை சீட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றி வந்துள்ளனர் . பாதிக்கப்பட்டவர்கள் தளவாய்புரம் காவல் நிலை யத்தில் கடந்த ஆறு மாத மாக புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை என்று கூறப்படு கிறது. இந்நிலையில், பாதிக் கப்பட்டவர்கள் ஜனவரி 27 அன்று சிட்பண்ட் அலுவல கத்தை முற்றுகையிட்டு உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். தளவாய்புரம் காவல் துறையினர் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர் .பணம் கொடுக்கவில்லை என்றால் அடுத்த மட்டமாக விருதுநகர் மாவட்ட ஆட்சி யர் அலுவலகம் மற்றும் விருதுநகர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பு அலுவலகத்தில் போராட் டம் நடத்துவோம் என்ன பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தெரிவித்தனர்.