மணிப்பூர் மாநிலத்தில் இனக்கலவரத்தை தடுக்கத்தவறிய ஒன்றிய-மாநில பாஜக அரசுகளைக் கண்டித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சி , கிறிஸ்தவ சமூக நீதிப் பேரவை ஆகியவற்றின் சார்பில் திருவில்லிபுத்தூர் காமராஜர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் சீனு சதுரகிரி தலைமை தாங்கினார் .பேரவையின் மாநில துணைப் பொதுச் செயலாளர் கப்பல் பாபு, கட்சியின் மாநில துணை பொதுச் செயலாளர் ஆற்றல் அரசு மாநிலத் துணைச் செயலாளர் மாலின் உள்ளிட்டோர் பேசினர்.