திருச்சுழி, அக்.21- திருச்சுழி அருகே உள்ள ப.வாகைக்குளம் கிராமத் தில் திறக்கப்பட இருந்த டாஸ்மாக் மதுக்கடை மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் நடைபெற்ற தொடர் போராட்டத்தால் அங்கிருந்து அகற்றப் பட்டது. விருதுநகர் மாவட்டம், திருச்சழி ஒன்றியத்திற்கு உட்பட்டது செங்குளம் ஊரா ட்சி. இங்குள்ள ப.வாகைக் குளம் கிராமத்தில் புதியதாக அரசு மதுபானக்கடை திறப்பதற்கு ஏற்பாடுகள் நடைபெற்றன. அதற்கு பொது மக்கள் கடும் எதிப்பு தெரிவித்தனர். டாஸ்மாக் கடை அமைக்கக் கூடாது என தொடர்ந்து மனுக் களை அரசு அதிகாரிகளிடம் வழங்கினர். இருந்த போதும், கடையை அகற்ற உரிய நட வடிக்கை எடுக்கவில்லை. இதையடுத்து, மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்துக் கட்சிகளின்ம் சார்பில் கோரிக்கை மனு வழங்கப்பட்டது. பின்பு, அக் டோபர் 20 அன்று வட்டாட்சி யர் அலுவலகத்தில் ரேசன் காடுகளை ஒப்படைத்து குடி யேறும் போராட்டம் நடத்தப் பட்டது.
இயைதடுத்து, அதிகாரி கள் சமாதானப் பேச்சு வார்த்தைக்கு அழைத்தனர். அருப்புக்கோட்டை வட் டாட்சியர், காவல்துறை யினர் மற்றும் சிபிஎம் நிர்வாகி கள் கலந்து கொண்டு பேச்சுவார்த்தை நடத்தினர். முடிவில், மதுக் கடையை வாகைக்குளம் கிராமத்தில் இருந்த அகற்றிட முடிவு எடுக்கப்படும் என உறுதிய ளித்தனர். இதையடுத்து போ ராட்டம் ஒத்தி வைக்கப் பட்டது. அதன்படி அக்டோபர் 20 அன்று மாலை நடைபெற்ற சட்ட ஒழுங்கு ஆய்வு கூட்டத் தில் வாகைக்குளம் கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று மாவட்ட ஆட்சியர் அரசு மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்ய உத்தரவிட்டார்.இதையடுத்து போராட்டம் வெற்றி பெற்றது. போராட்டத்திற்கு தலை மையேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் எம்.தாமஸ், வி.முரு கன், நகர் செயலாளர் எஸ். காத்தமுத்து, ஒன்றிய செய லாளர்கள் எம்.கணேசன், ஜி.மார்க்கண்டன், அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில செயலா ளர் எஸ்.லட்சுமி, மாவட்ட தலைவர் எஸ்.தெய்வானை, மாவட்ட செயலாளர் உமா மகேஸ்வரி, சிஐடியு தலை வர்கள் ஆர் .பெருமாள் கே.சுரேஸ்குமார் மற்றும் எஸ்.செல்வராணி, பூரணம் உள்ளிட்டோருக்கு கிராம மக்கள் தங்களது மன மார்ந்த நன்றியை தெரி வித்தனர்.