மதுரை ஆனையூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் சுமார் 450 மாணவர்கள் படித்து வருகிறார்கள். மதுரை மேற்கு வட்டாரக் கல்வி அலுவலகமும் இப்பள்ளி வளாகத்திலேயே செயல்பட்டு வருகிறது. மாணவர்களுக்கு வகுப்பறைகள் இல்லாததால் மரத்தடியில் 200 மாணவர்கள் படிப்பதை வழக்கமாக உள்ளது. மாணவர்கள் நலன் கருதி கல்வி அலுவலகத்தை வேறிடத்திற்கு மாற்றம் செய்யவேண்டும்.