districts

img

சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் முதல் சுற்றில் ரஷ்ய வீராங்கனை வெற்றி

சென்னை செப். 13- சென்னை நுங்கம்பாக்கம் மைதானத்தில் நடைபெற்று வரும் சென்னை ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டி யின் முதல் சுற்றில் ரஷ்ய வீராங்கனை யிடம் அமெரிக்காவின் ஆலிசன் ரிஸ்க் தோல்வி அடைந்தார்.  சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி சென்னையில் முதல் முறையாக நடைபெறுகிறது. செவ்வாயன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னை ஓபன் டென்னிஸின் முதல் நிலை வீராங்கனையாக  அறிவிக்கப்பட்ட அமெரிக்காவின் ஆலிசன் ரிஸ்கே, ரஷ்யா வின் அனஸ்டாசியா கசனோவாவை எதிர்கொண்டார். முதல் நிலை வீராங்கனை  விளையாடும் போட்டி என்ப தால் எதிர்பார்த்தது போல் ரசிகர் கூட்டமும் அதிகமாகக் காணப்பட்டது.  ஆட்டம் தொடங்கியதிலிருந்து ரஷ்ய வீராங்கனை கசனோவா தனது அதிரடி ஆட்டத்தால் தமிழக ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தார். இதனால் மைதானத்தில் அவர் செட்டை கைப்பற்றும்போது ரசிகர்களிடம் ஆரவாரம் காணப்பட்டது.  அவர் முதல் செட்டை 6 -2 என்ற புள்ளி கள் கணக்கில் எளிதில் கைப்பற்றினார்.  இரண்டாவது செட்டையும் அதிரடியாகத் தொடங்கிய ரஷ்ய வீராங்கனைக்கு அமெரிக்கா வீராங்கனை ஆலிசன் கடும் சவால் கொடுத்தார். இதனால் இருவரது ஆட்டத்திலும் அனல் பறந்தது. ஆனாலும் ரஷ்ய வீராங்கனை யின் கையே ஓங்கியது. 23 வயதாகும் இளம் ரஷ்ய வீராங்கனையின் ஆட்டத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அமெரிக்கா வீராங்கனை சோர்ந்து போனார். ஒன்றரை மணி நேரம் நீடித்த இந்த ஆட்டத்தில் ரஷ்ய வீராங்கனை கசனோவா 6-2,6-3 என்ற செட்  கணக்கில் வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

;