districts

img

காரியாபட்டி அருகே புதிய தடுப்பணையை அமைச்சர் திறந்துவைத்தார்

விருதுநகர், ஜூலை 30- விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி வட்டம், கல்குறிச்சி கிராமத்தில்  பொதுப்பணித்துறை மற்றும்   நீர்வள ஆதாரத்துறையின் மூலம் கவுண்டா நதியின்  குறுக்கே ரூ.10.11 கோடி மதிப்பீட்டில் கட்டிமுடிக்கப்பட்ட புதிய தடுப்பணையை  தமிழக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட வருவாய் அலுவலர் ஜெ. ரவிக்குமார் தலைமை தாங்கினார். மேலும் இதில், அருப்புக்கோட்டை கோட்டாட்சியர் கல்யாணகுமார், காரி யாபட்டி வட்டாட்சியர்  விஜயலட்சுமி, செயற்பொறியா ளர் பவளக்கண்ணன்,மாவட்ட ஊராட்சி உறுப்பினர்  தங்க தமிழ்வாணன், திருச்சுழி  ஒன்றியக்குழுத் தலைவர்  பொன்  னுத்தம்பி உட்பட பலர் பங்கேற்றனர்.