districts

img

தேனி எம்.பி., மீது வழக்கு பதிவு செய்ய அனுமதி கேட்டு சபாநாயகருக்கு கடிதம்

தேனி வன அலுவலர் தகவல் 

தேனி ,அக்.14-  பெரியகுளம் அருகே தேனி நாடாளு மன்ற உறுப்பினர் ரவீந்திரநாத்  தோட்டத்தில் சிறுத்தை இறந்த விவகாரத்தில்  அவர் மீது வழக்குப்பதிவு செய்வதற்காக நாடாளுமன்ற சபாநாயகருக்கு கடிதம் அனுப்ப உள்ளதாக  மாவட்ட வன அலுவலர் சமர்த்சா தெரிவித்துள்ளார் . பெரியகுளம் அருகே லட்சுமிபுரம் அடுத்துள்ள கோம்பை வனப்பகுதியை ஒட்டி  அதிமுக எம்.பி ரவீந்திரநாத்துக்கு சொந்தமான தோட்டத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆண் சிறுத்தை ஒன்று இறந்த நிலையில் மீட்கப்பட்டது. சிறுத்தை இறந்த விவகாரம் தொடர்பாக தோட்டத்தில் ஆட்டு கிடை அமைத்திருந்த இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அலெக்ஸ் பாண்டியன் மற்றும் தோட்ட மேலாளர்களான ராஜவேல் மற்றும் தங்க வேல் என மூன்று நபர்கள் மீது வனத்துறை யினர் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.


எம்.பி மீது நடவடிக்கை எடுக்க திமுக வலியுறுத்தல்

இந்நிலையில் தோட்ட உரிமை யாளரும், அதிமுக நாடாளுமன்ற உறுப்பின ரான ரவீந்திரநாத் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என திமுக தேனி வடக்கு மாவட்ட செயலாளர் தங்க தமிழ்ச்செல்வன் தலைமையில்  வெள்ளியன்று தேனி மாவட்ட வன அலுவலர் சமர்த்சாவிடம்  புகார் மனு அளிக்கப்பட்டது. புகார் மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட வன அலுவலர் சமர்த்சா, சிறுத்தை இறந்த இடமானது எம்.பி.,ரவீந்திரநாத் உட்பட மூன்று நபர்கள் பெயரில் உள்ளது. தோட்ட உரிமையாளர்களின் பெயர்களை வருவாய்த்துறையினரிடம் இருந்து பெறுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. மேலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவீந்திர நாத்துக்கு சொந்தமான இடம் என்பதால் அவர் மீது வழக்குப்பதிவு செய்வதற்கு பல வழிமுறைகளை பின்பற்ற வேண்டும். வழக்குப் பதிவு செய்வதற்காக நாடாளு மன்ற சபாநாயகருக்கு கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது .அதன் பின் அவருக்கு சம்மன் அனுப்பி ,முகாந்தி ரம் இருப்பின்  நடவடிக்கை எடுக்கப் படும். மற்ற இருவருக்கு சம்மன் அனுப் பப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.

தங்க.தமிழ்செல்வன் பேட்டி 

ப்பில்  தங்கதமிழ்செல்வன் கூறுகை யில், சிறுத்தையின் மரணத்தில் உள்ள மர்மத்தை வனத்துறையினர் கண்டறிந்து தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும்  அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தேனி மாவட்டத்தில் இது போன்ற சிறுத்தை உயிரிழப்பு ஏற்படா மல் இருப்பதற்கு வனத்துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரி வித்தார். மேலும் சின்னமனூர் சுற்று வட்டா ரப் பகுதிகளில் வறண்ட பகுதிக்கு தண்ணீர் எடுத்துச் செல்லும் விவசாயிகளின் குழாய் கள் துண்டிக்கப்பட்ட விவகாரம் குறித்து பதிலளித்த அவர், 2014ஆம் ஆண்டு அரசாணையை பின்பற்றித்தான் ஆற்றில் இருந்து 200 மீட்டர், வாய்க்காலில் இருந்து 50 மீட்டர் தூரத்திற்கு அடுத்தபடியாக உள்ள தங்கள் சொந்த இடத்தில் விவசாயி கள் கிணறு தோண்டி விளைநிலங்களுக்கு தண்ணீர் எடுத்துச் செல்கின்றனர். இது முற்றிலும் உண்மை.  எனவே அரசாணையை பின்பற்றி விவ சாயிகள் தண்ணீர் எடுத்துச் செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூட்டு றவு துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தலை மையில் விரைவில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினை விவசாயிகளுடன் சந்தித்து வலியுறுத்த உள்ளதாக தெரிவித்தார். பேட்டியின் போது பெரியகுளம் சட்ட மன்ற உறுப்பினர் சரவணகுமார் ,முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் ,தேனி ஒன்றியக்குழு தலைவர் சக்கரவர்த்தி உள்ளிட்ட நிர்வாகிகள் உடனிருந்தனர்.