districts

img

வேடசந்தூரில் பேருந்து நிலையம் விரிவுபடுத்தப்படும் எஸ்.காந்திராஜன் எம்.எல்.ஏ., தகவல்

வேடசந்தூர், செப்.21- வேடசந்தூரில் இடநெருக்கடியில் செயல்பட்டு வரும் பேருந்து நிலையத்தை விரைவில் விரிவு படுத்தி செயல்பட நடவடிக்கை எடுக்கப்படும் என்று எஸ்.காந்திராஜன் எம்.எல்.ஏ.,  தெரிவித்துள்ளார். வேடசந்தூரில் நகரின் முக்கிய பகுதியான ஆத்துமேட்டில் நான்கு சாலைகளும் சந்திக்கும் இடத்தில் முதல் முறையாக காவல் நிலையம் சார்பில் நவீன சி.சி.டி.வி. கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டுள்ளது. இதன் திறப்பு விழா புதனன்று நடைபெற்றது. விழாவிற்கு வேடசந்தூர் போலீஸ் துணை சூப்பி ரண்டு துர்காதேவி தலைமை ஏற்றுப்பேசினார்.  விழாவில் எஸ்.காந்திராஜன் எம்.எல்.ஏ., பங்கேற்று நவீன கண்காணிப்பு கேமராவை இயக்கி வைத்து பேசுகையில், காவல் துறையில் பணியாற்றுவது கடுமையான பணி ஆகும். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பணி சுமையை குறைக்கும் வகையில் போலீஸ் துறையில் பணியாற்றுபவர்களுக்கு வாரத்திற்கு ஒரு நாள் விடுமுறை வழங்கியுள்ளார்.  விரைவில் நகர் முழுவதும் முக்கிய இடங்களில் கண்கா ணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட உள்ளது.  விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் நலன் கருதி வேடசந்தூரில் விரைவில் உழவர் சந்தை திறப்பு விழா நடைபெற உள்ளது. அதே போல வேடசந்தூர் பேருந்து நிலையம் மிக குறுகிய இடத்தில் பல ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.அதை விரிவு படுத்தி அனைத்து பேருந்துகளும் பேருந்து நிலையத்திற்குள் சென்றுவர நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

;