districts

img

சிபிஎம் தஞ்சாவூர் மாவட்ட 23-வது மாநாடு எழுச்சியோடு துவங்கியது

கொரோனா தன்னார்வலர்களுக்கு பாராட்டு

மாநாட்டில், கொரோனா பெருந்தொற்று காலத்தில் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தன்னார்வலர்களாக சேவையாற்றிய, மாணவர், வாலிபர் சங்க நிர்வாகிகள் பாராட்டப்பட்டனர்.  மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர் ஜி.அரவிந்தசாமி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் மாவட்டத் தலைவர் ஆம்பல் துரை.ஏசுராஜா மற்றும் பி.அருண்குமார், எஸ்.பிரபாகரன், எஸ்.சக்திவேல், ஜி.வீரையன், வி.அர்ஜூன், அபிஷேக், வி.ராஜாராம், சிரில் இமான், சந்தோஷ், சிலம்பு, வினித், மஹாராஜா, எஸ்.சந்தோஷ்குமார், எஸ்.மணிகண்டன், அஜய், பாலாஜி உள்ளிட்ட மாணவர், வாலிபர் சங்க தோழர்கள் 19 பேரை பாராட்டி, கைத்தறி ஆடை, கேடயம் வழங்கப்பட்டது. மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் உள்ளிட்ட நிர்வாகிகள் முன்னிலையில் மத்தியக் குழு உறுப்பினர் பி.சம்பத் பாராட்டி வாழ்த்திப் பேசினார்.

தஞ்சாவூர், டிச.18 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சாவூர் மாவட்ட 23வது மாநாடு சனிக்கிழமை காலை தஞ்சாவூர், ரோ கிணி மருத்துவமனை அருகில் செட்டி மஹாலில் தோழர் கோ.வீரையன் நினை வரங்கில் எழுச்சியுடன் தொடங்கியது.  கடந்த மாநாடு நடைபெற்ற பாப நாசத்தில் இருந்து கொடி, கும்பகோ ணம் நகரத்திலிருந்து தோழர் வே.நட ராஜன் நினைவாக கொடிமரம், இராய முண்டான்பட்டியிலிருந்து தியாகி என். வெங்கடாசலம் நினைவாகவும், பட்டுக் கோட்டையிலிருந்து தியாகிகள் இர ணியன், சிவராமன், ஆறுமுகம் நினை வாகவும், வேப்பத்தூரிலிருந்து தோழர் பி.இராமமூர்த்தி நினைவாகவும் ஜோதி எடுத்து வரப்பட்டது.  தொடர்ந்து, கொடி, கொடி மரம், நினைவு ஜோதி, பிரதிநிதிகள் ஊர்வலம் தஞ்சை ராமநாதன் மருத்துவமனை அருகில் இருந்து மாநாடு நடைபெறும் சிட்டி மஹால் நோக்கி, பட்டாசுகள் வெடித்தும், மேளதாளங்கள் முழங்க, உற்சாகமாக சென்றடைந்தது. இதில் ஆயிரக்கணக்கான கட்சியினர் கலந்து கொண்டனர்.  தொடர்ந்து மாவட்டக் குழு உறுப்பி னர் ஆர்.காசிநாதன் மாநாட்டுக் கொடியை ஏற்றி வைத்தார். வரவேற்புக் குழு தலைவர் பி.செந்தில்குமார் வர வேற்று பேசினார். தலைமைக் குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் சின்னை.பாண்டியன், மாவட்டக்குழு உறுப்பினர் எம்.செல்வம், பூதலூர் ஒன்றியக்குழு உறுப்பினர் கலைச்செல்வி ஆகியோர் மாநாட்டை வழிநடத்தினர். 

மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.மனோகரன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநில செயற்குழு உறுப்பி னர் மதுக்கூர் இராமலிங்கம் துவக்கவு ரையாற்றினார். மாவட்டச் செயலாளர் கோ.நீலமேகம் அரசியல் ஸ்தாபன வேலையறிக்கையை முன்வைத்து பேசி னார். மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத்   ஆலோசனை வழங்கினார்.  தொடர் மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், தொழிலாளர்களுக்கு நிவாரணம் கேட்டு 2022 ஜனவரி 5, 6, 7  ஆகிய தேதிகளில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற உள்ளது. இந்த  போராட்டத்தை மார்க்சிஸ்ட் கட்சி ஆத ரிக்கிறது.  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில், வழங் கப்படும் கூலியை, புதிதாக பொறுப் பேற்றுள்ள திமுக அரசு, தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிப்படி 300  ரூபாய் கூலியும், 150 நாட்களாக வேலையை உயர்த்தியும் வழங்க வேண்டும். தஞ்சாவூர் ஸ்மார்ட் சிட்டி திட்டப் பணிகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். பட்டு  கைத்தறி நெசவு தொழிலுக்கு மத்திய  அரசு ஜிஎஸ்டி வரியை 12 விழுக்கா டாக உயர்த்துவதற்கான அறிவிப்பை திரும்பப் பெற வேண்டும். ஜிஎஸ்டி  வரியிலிருந்து கதருக்கு விலக்களித்த தைப் போல, பட்டு கைத்தறி நெசவுத் தொழிலுக்கும் வரிவிலக்கு அளித்திட வேண்டும்.  மாட்டு வண்டித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை பாதுகாத்திட, கொ ரோனா ஊரடங்கால் தற்காலிகமாக மூடப்பட்டுள்ள, மாட்டு வண்டிக்கான மணல் குவாரி, கும்பகோணம் தாலுகா  கொத்தங்குடி, பூதலூர் தாலுகா திருச்சென்னம்பூண்டி, பட்டுக்கோட்டை தாலுகா தொக்காலிக்காடு ஆகிய இடங்களில் மாட்டு வண்டிக்கான மணல்  குவாரி திறக்கப்பட வேண்டும். லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களில் மணல்  எடுக்க அமைக்கப்படவுள்ள, லாரிக் கான மணல் குவாரி அனுமதியை ரத்து  செய்ய வேண்டும். 

கட்டுமான, முறைசாராத் தொழிலா ளர்களின் பணப் பயன்கள், ஓய்வூதியம் ரூ.3,000 அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். அனைவரையும் நலவாரி யத்தில் பதிவு செய்திட மாவட்ட நிர்வா கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் பெண்கள்,  குழந்தைகள் மீதான பாலியல் வன்கொ டுமை, சாதிய வன்கொடுமைக்கு எதிராக மாவட்ட நிர்வாகம் உறுதியான நடவ டிக்கை எடுக்க வேண்டும்.  ஒன்றிய மோடி அரசின் மக்கள் விரோத, விவசாயிகள், விவசாயத் தொழி லாளர்கள், தொழிலாளர் விரோத கொள்கைகளை எதிர்த்து 2022 பிப்ரவரி மாதம் நடைபெற உள்ள, அனைத்து தொழிற்சங்க நாடு தழுவிய 2 நாள் 48  மணி நேர பொது வேலைநிறுத்த போராட் டத்தை, தஞ்சை மாவட்டத்தில் வெற்றி கரமாக நடத்திட தீர்மானம் நிறைவேற் றப்பட்டுள்ளது.

பாபநாசம்

சிபிஎம் தஞ்சாவூர் மாவட்ட 23 வது மாநாட்டு கொடியானது பாபநாசத்தி லிருந்து சென்றது. இதற்காக நடை பெற்ற நிகழ்ச்சிக்கு பாபநாசம் ஒன்றியச்  செயலர் முரளிதரன் தலைமை வகித் தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மனோகரன் பேசினார். மாநாட்டில் ஏற்றப்பட இருந்த கொடியை மாவட்டச் செயற்குழு உறுப்பினர் மனோகரன் வழங்க, பாபநாசம் ஒன்றியச் செயலர் முரளிதரன் பெற்றுக் கொண்டார். இதில் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் மூத்த தோழர் இளங்கோவன், கிளைச் செயலாளர்கள் பங்கேற்றனர்.
 

;