மதுரை, டிச.25- நடந்து முடிந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் சுங் குடி சேலை மீதான ஜிஎஸ்டி வரி யினை ரத்து செய்திட வேண்டும் என்று ஒன்றிய நிதியமைச்சரை நேரில் சந்தித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் மனு அளித்து வலி யுறுத்தினார். இதனை முன்னிட்டு மதுரையில் உள்ள மதுரை சுங் குடி உற்பத்தியாளர் - விற்பனை சங்கம் சார்பில் சங்கத்தின் தலை வர் ஆர். பி. ஆர். ரகு ராஜேந்திரன், உபதலைவர் பி. கே. மதன்லால், செயலாளர் மனோகரன் மற்றும் ரவிக்குமார் உள்ளிட்ட நிர்வாகி கள் சு.வெங்கடேசன் எம்.பி.க்கு சால்வை அணிவித்து, நன்றியை தெரிவித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை மாநகர் மாவட்டச் செயலாளர் மா. கணே சன், மாவட்ட செயற்குழு உறுப்பி னர்கள் ஜா. நரசிம்மன், இரா. லெனின், ஜெ. லெனின், புறநகர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ். கார்த்தி உள்ளிட்ட பலர் உட னிருந்தனர்.