தூத்துக்குடி,டிச 12 கோவில்பட்டியில் நடைபெற வுள்ள தேசிய ஜூனியர் ஹாக்கிப் போட்டியில் விளையாடவுள்ள தமிழக ஜூனியர் ஹாக்கி அணி வீரர்களை கனிமொழி எம்.பி. அறி முகம் செய்து, விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் தேசிய ஜூனியர் ஹாக்கிப் போட்டி இம்மாதம் 16 ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை நடைபெற வுள்ளது. இதில், தமிழக ஜூனியர் ஹாக்கி அணி வீரர்களை தூத் துக்குடி மக்களவைத் தொகுதி உறுப்பினர் கனிமொழி அறிமுகம் செய்து, ஹாக்கி வீரர்களுக்கு சீரு டைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். ஜூனியர் ஹாக்கி அணி வீரர்களாக திவாகர், கவியரசன், அரவிந்த், முருகேஷ், அர விந்த்குமார், முத்துகுமார், சூரஜ், நந்தகுமார், திலீபன், சஞ்சய் குமார், நிஷி தேவ அருள், முரளி கிருஷ்ணன், சதீஷ், நாகரோகித், பாலச்சந்திரன், கோபால கிருஷ்ணன், மனோஜ்குமார், முகம்மதுஇஸ்கான் கான் ஆகியோர் தேர்வு செய்யப்பட் டுள்ளனர். இந்த அணிக்கு கோவில்பட்டியைச் சேர்ந்த நிஷி தேவ அருள் தலைவராக உள்ளார். ஹாக்கி அணி வீரர்கள் 18 பேரில் அணி தலைவர் உள்பட 9 பேர் கோவில்பட்டியைச் சேர்ந் தவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது. நிகழ்ச்சியில், அமைச்சர் கீதாஜீவன், விளாத்திகுளம் எம்.எல்.ஏ. மார்க்கண்டேயன், தேசிய ஹாக்கிப் போட்டி பொருளாளர் சங்கிலி காளை, திண்டுக்கல் மாவட்டச் செயலர் ராமானுஜம், தமிழக அணி பயிற்சியாளர் முத்துகுமார், தேசிய போட்டி யின் துணைத் தலைவர் செந்தில் ராஜ்குமார், துணைச் செயலர் குருசித்ரசண்முகபாரதி, ஒலிம்பியன் திருமால்வளவன், திமுக பொதுக்குழு உறுப்பினர் ஜெகன் பெரியசாமி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.