districts

img

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் குமரி மாவட்டத்திற்கு 7 ஆம் தேதி வருகை

நாகர்கோவில், மார்ச் 5- தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வருகிற 7 ஆம் தேதி குமரி மாவட்டத்திற்கு வருகை தர உள்ளார். 2 நாள் சுற்றுப்பயணமாக  சென்னையில் இருந்து புறப்பட்டு 6 ஆம் தேதி மதுரை வருகிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலமாக தூத்துக்குடி வருகிறார். அங்கு நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இரவு தூத்துக்குடியில் ஓய்வு. 7 ஆம் தேதி காலை தூத்துக்குடியில் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் முதல்வர் மதியம் அங்கிருந்து புறப்பட்டு கார் மூலமாக குமரி மாவட்டம் வருகிறார். மாலை 4 மணிக்கு நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் உள்ள சாலை பணிகளை ஆய்வு செய்கிறார். இதைத் தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு பேயன்குழியில் பொதுப்பணித்துறை நீர்வள ஆதார அமைப்பு சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ள மழை சேத சீரமைப்பு பணிகளை பார்வையிடுகிறார். மாலை 5 மணிக்கு குமாரகோவில் பகுதியில் மழை சேத சீரமைப்பு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்கிறார். பின்னர் அங்கிருந்து கார் மூலமாக மதுரை செல்கிறார். மதுரையில் இருந்து விமானம் மூலமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் இரவே சென்னை செல்கிறார்.