தேனி , ஜூலை.21- ஆண்டிபட்டி அருகே ஜி.கல்லுப்பட்டி ஊராட்சி பள்ளியில் ஆங்கில பாடத் திற்கு ஆசிரியர் இல்லாமல் படிக்க முடியவில்லை என்ற நிலையில் ஆசிரியரை நியமிக்கக்கோரி மாணவர் கள், பெற்றோர்கள் பள்ளி முன் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தேனி மாவட்டம், ஆண்டி பட்டி அருகே உள்ள ஜி. கல்லுப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி செயல்பட்டு வரு கிறது. இந்த பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் உள்பட 5 ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். ஜி.கல்லுப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகு திகளை சேர்ந்த 120க்கும் மேற்பட்ட மாணவ-மாணவி கள் இந்த பள்ளியில் படித்து வருகின்றனர். கடந்த கல்வி ஆண்டு வரையில் இந்த பள்ளியில் அனைத்து பாடங் களுக்கும் ஆசிரியர்கள் இருந்தனர். இதே பள்ளியில் பணியாற்றிய ஆங்கில ஆசிரியர் பணிமாறுதலாகி சென்றுவிட்ட நிலையில், நடப்பு கல்வியாண்டில் இது வரை ஆங்கில ஆசிரியர் நியமனம் செய்யப்பட வில்லை. இதனால் இப்பள்ளியில் படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு ஆங்கில பாடம் நடத்தப் படவில்லை. இந்த கல்வி யாண்டில் பள்ளிகள் திறக்கப் பட்டு இரண்டு மாதங்கள் கடந்த நிலையில் இது வரை ஆங்கில ஆசிரியர் நிய மிக்காததால் மாணவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வந்தனர். இதுகுறித்து மாண வர்களின் பெற்றோர்கள் ஆங்கில ஆசிரியரை நிய மிக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பள்ளி தலைமை ஆசிரியரிடம் பல முறை புகார் கொடுத்தனர். தர்ணா இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்காததால் பள்ளி மாணவ-மாணவிகளை பள்ளிக்கு அனுப்பாமல், பள்ளி முன்பாக உள்ள ஒரு மரத்தடியில் அமர்ந்து மாணவர்கள் மற்றும் பெற் றோர்கள் போராட்டம் நடத்தி னர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் அங்கு விரை ந்து வந்த போலீசார், மாண வர்கள் மற்றும் பெற்றோர்க ளிடம் பேச்சுவார்த்தை நடத் தினர். கல்வித்துறை அதிகாரி கள் வரும் வரையில் போராட் டத்தை கைவிடப் போவ தில்லை எனக்கூறி தொ டர்ந்து போராட்டம் நடத்தி னர். மரத்தடியில் அமர்ந்தபடி மாணவர்கள் புத்தகங்களை படித்தனர். இதனையடுத்து ஆண்டிபட்டி வட்டார கல்வி அலுவலர் ஸ்ரீதேவி மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் சாந்தி ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும் வருகின்ற புதன்கிழ மைக்குள் ஜி. கல்லுப்பட்டி ஊராட்சி நடுநிலைப் பள்ளி க்கு ஆங்கில ஆசிரியர் நிய மிக்கப்படுவார் என்றும் உறுதி அளித்தனர். இதனை யடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர்.