திமுக தலைமையிலான ‘இந்தியா’ கூட்டணி சார்பில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சு.வெங்கடேசன், மதுரை அரசு டவுன் ஹாஜியார் ஹாஜி சபூர் மைதீனை
ஞாயிறன்று நேரில் சந்தித்து பொன்னாடை போர்த்தி ஆதரவு திரட்டினார். தொடர்ந்து ஹாஜி சபூர் மைதீன், நாடாளுமன்ற வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு பொன்னாடை போர்த்தி தங்களுடைய ஆதரவை தெரிவித்தார். உடன் மாநகராட்சி துணை மேயர் தி.நாகராஜன், தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழு மாவட்டத் தலைவர் கே.அலாவுதீன், துணைத் தலைவர் பி.முகமது அலி ஆகியோர் உடனிருந்தனர்.