districts

img

நத்தம் அருகே பட்டா மாறுதல் சிறப்பு முகாம்

நத்தம், டிச.25- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே ஆவிச்சிபட்டியில் பட்டா மாறுதல் சிறப்பு முகாம் தாசில்தார் சுகந்தி தலைமையில் நடைபெற் றது. மண்டல துணை வட்டாட்சி யர் மாயழகு, வருவாய் ஆய்வா ளர் செந்தில்குமார் ஆகியோர் முன் னிலை வகித்தனர். கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்குமார் வர வேற்றார்.  இதில் சுற்றுவட்டார விவசாயி கள் பட்டா மாறுதல்,பெயர் மாற் றம், பாதுகாவலரின் பெயர்களில் திருத்தம், நில உரிமையாளரின் உறவுமுறை தொடர்பான திருத்தம், காலியாக உள்ள பத்தி களில் திருத்தம், சிறிய அளவி லான பிழைகள் திருத்தம் செய்வ தற்கான மனுக்கள் பெறப்பட்டு தகுதியுள்ள மனுக்களுக்கு தீர்வு கள் காணப்பட்டு கணினி முறை யில் பட்டா நகல்கள் பயனாளி களுக்கு வழங்கப்பட்டது. முகாமில் வருவாய்த்துறை யினர், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.