தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினரும், திரைப்பட இயக்குநர் எம்.சிவக்குமாரின் இணையர் எஸ்.லட்சுமி உடல் நலக்குறைவால் காலமானார்.புதுச்சேரி இடையஞ்சாவடி இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலுக்கு தமிழ்ச்செல்வன், ரோகினி, ஆதவன்தீட்சண்யா, ராமச்சந்திரன், சைதை ஜே, கலப்பிரான், திரைப்பட இயக்குநர் சக்தி, புதுச்சேரி தலைவர்கள் உமா, அமர்நாத், கலியமூர்த்தி, அருண் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினார்.