districts

img

வியாபாரிகளின் சிண்டிகேட்டால் பட்டுக்கூடு விலைச்சரிவு

ஒட்டன்சத்திரம், ஜூலை 4- ஒட்டன்சத்திரம் விவசாயிகளால் உற்பத்தி செய்யப்படும் பட்டுக்கூடு விலைச் சரிவால் விவசாயிகள் கடு மையாக பாதிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன் சத்திரம், கள்ளிமந்தையம், கொத் தையம், பொருளூர், தொப்பம்பட்டி, வீரலப்பட்டி, சத்திரப்பட்டி உள்  ளிட்ட கிராமப்பகுதிகளில் ஏராளமான  விவசாயிகள் வெண் பட்டுக்கூடு உற்  பத்தி செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். பட்டு புழுவிற்கு உணவான மல்  பெரி இலை சாகுபடி செய்து 60 நாளில்  அறுவடை செய்து, பட்டு புழு வளர்ப்பு மனை அமைத்து, 25 நாளில்  முறையாக பராமரித்து வெண் பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது. விவசாயிகள் உற்பத்தி செய்த வெண்பட்டு கூடை திருப்பூர் மாவட்  டம் உடுமலை அருகே மைவாடி யில் உள்ள மாநில பட்டு வளர்ச்சித் துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று விற்கப்படுகிறது. இங்கு ஒரு கிலோ வெண்பட்டு கூடு ரூ 450  வரை விவசாயிகளிடமிருந்து கொள்  முதல் செய்யப்படுகிறது. அதற்குண்டான தொகை 30 நாட்கள் முதல் 3 மாதங்களுக்கு பிறகு  விவசாயிகளுக்கு பட்டுவாடா செய் யப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு  தனியார் வியாபாரிகளால் ஒரு கிலோ  பட்டுக்கூடு ரூ. 700 முதல், ரூ. 800  வரை வாங்கப்பட்டு வந்தது.

வியாபாரிகளின் சிண்டிகேட்டால் விலைச்சரிவு

தற்போது சீனாவில் இருந்து வெண் பட்டுக்கூடு இறக்குமதி செய் வதாலும், தனியார் வியாபாரிகள்  சிண்டிகேட் காரணமாக திடீரென பட்டு நூல் விலை குறைந்தது. இத னால் பட்டுக்கூடுகளின் விலையும் கடும் சரிவை சந்தித்தது.  இதனால் பட்டுக்கூடு உற்பத்தி விவசாயிகள் கடுமையாக பாதிக் கப்பட்டுள்ளனர். இது குறித்து பட்டுக்கூடு உற்  பத்தி கள்ளிமந்தையம் விவசாயி ரெங்கசாமி கூறுகையில், பட்டுக்கூடு  உற்பத்தி விவசாயிகள் சீதோஷ்ண நிலை மாற்றம், நோய் தாக்குதல், நிலையில்லாத விலை உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் பாதிக் கப்பட்டு வருகின்றனர். தமிழகத்திலுள்ள பட்டுக்கூடு அங்காடிகளில் உரிய விலை  கிடைக்காததால் பெரும்பாலான விவசாயிகள் கர்நாடக மாநிலத்திற்கு  விற்பனைக்கு கொண்டு செல்லும் சூழல் உள்ளது. கர்நாடக மாநிலத்தில் பட்டுக் கூடு,

பட்டுநூல் உற்பத்தி பிரதான மாக உள்ள நிலையில் அம்மாநில அரசு, விவசாயிகளுக்கு கிலோ வுக்கு ரூ. 50 ஊக்கத்தொகை வழங்கு கிறது.ஆனால் தமிழக மார்க்கெட் டுளில் பட்டுக்கூடுக்கு உரிய விலை கிடைப்பதில்லை.  இதனால் இங்குள்ள விவசாயி கள் 60 சதவீதம் பேர், கர்நாடக மார்க்கெட்களுக்கு விற்பனைக்கு கொண்டு செல்கின்றனர். இதனால் தமிழக அரசுக்கு வரி வருவாய் இழப்பு ஏற்படுவதோடு விவசாயி களும் பல கி.மீ.,தூரம் கடந்து வேறு மாநிலத்திற்கு பட்டுக்கூடுகளை விற்பனைக்கு கொண்டு செல்லும் அவலம் நீடிக்கிறது. கர்நாடக மாநில விவசாயிகளி டம், அம்மாநில அமைச்சர் மற்றும் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி கர்நாடக மாநில கச்சா பட்டு விற்  பனை கமிட்டி வாயிலாக கச்சா பட்டு  நூல் கொள்முதல் செய்யப்பட்டது.  ஒரு சில நாட்களில் அம்மாநி லத்தில் பட்டுக்கூடு விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. ஆனால் தமிழ கத்தில், பட்டுக்கூடு விலை உயர வில்லை. இளம் புழு, இடு பொருள், மல் பெரி உரம், ஒரு மாதம் வளர்ப்பு மனை பராமரிப்பு, கூலி ஆட்கள் செலவு உள்ளிட்ட என உற்பத்தி செலவினங்கள் அதிகரித்துள்ள நிலையில் விலை சரிவால் பட்டுக் கூடு உற்பத்தி விவசாயிகள் கடுமை யாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே கர்நாடக அரசை, தமி ழக அரசும் பின்பற்றி பட்டுக்கூடு களுக்கு உரிய விலை கிடைக்கவும்,  ஊக்கத்தொகை வழங்கவும், வியா பாரிகள் சிண்டிகேட் காரணமாக, பட்டு நூல் விலை சரிவை தடுக்கவும்  உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

;