நாகர்கோவில். டிச.11- நாடு முழுவதும் நிலுவையி லிருக்கும் வழக்குகளை விரை ந்து முடிக்க லோக் அதாலத் நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. குமரி மாவட்டத்தில் லோக் அதா லத் நிகழ்ச்சி சனிக்கிழமையன்று (டிச.11) நடைபெற்றது. நாகர்கோ வில் குழித்துறை இரணியல் பூதப்பாண்டி பத்மநாபபுரம் ஆகிய 5 நீதிமன்றங்களில் 12 அமர்வுகளில் லோக் அதாலத் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. நாகர்கோவில் நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு தலைவரும் முதன்மை நீதிபதியு மான செல்வ முருகன், வழக்கறி ஞர் சங்க தலைவர் மரிய ஸ்டீபன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இதில் குடும்ப நல வழக்கு, காசோலை மோசடி வழக்கு. மோட்டார் வாகன விபத்து தொ டர்பான வழக்குகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாராக்கடன் வழக்குகள் விசார ணைக்கு எடுக்கப்பட்டது. ஒவ்வொரு அமர்வுகளிலும் வழக்குகள் தனித்தனியே விசாரணை செய்யப்பட்டது. மாவட்டம் முழுவதும் 1304 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 420 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாராக்கடன் தொடர்பான வழக்குகளில் 227 வழக்குகளு க்கு ரூ.4 கோடியே 97 லட்சத்து 75 ஆயிரத்து 220 க்கு தீர்வு காணப்பட்டுள்ளது.