districts

மதுரை முக்கிய செய்திகள்

செப்.27 இராமநாதபுரத்தில்  சமையல் எரிவாயு குறைதீர் முகாம்

இராமநாதபுரம்,செப்.23- இராமநாதபுரம் மாவட்டம் இராமநாதபுரம், இராமேஸ்வரம். கீழக்கரை,  இராஜசிங்கமங்கலம், திருவா டானை, பரமக்குடி, கமுதி, கடலாடி, மற்றும் முது குளத்தூர் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் சமையல் எரிவாயு விநியோகம் தொடாபாக பொதுமக்கள் தங்களின் குறைகள் மற்றும் கோரிக்கைகளை நேரில் தெரிவிப்பதற்காக எண்ணெய் நிறுவனம் மற்றும் எரி வாயு முகவர்களுடன் குறைதீர்க்கும் கூட்டம் வரும் 27 ஆம் தேதி மாலை 5 மணிக்கு இராமநாதபுரம் மாவட்ட வருவாய் அலுவலர்  தலைமையில் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சி யர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெறவுள்ளது.  மேற் கண்ட கூட்டத்தில் எரிவாயு உபயோகிப்பவர்கள், தன்னார்வ நுகர்வோர் அமைப்பினர் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டு தங்களது குறைகளை தெரிவித்து பயன்பெற கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

வாலிபர் போக்சோவில் கைது

நத்தம், செப்.23- திண்டுக்கல் மாவட்டம் நத்தம் தொகுதி சாணார்பட்டி- வீரசின்னம்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன். இவரது மகன் ராஜா (வயது 35). இவர் கடந்த வருடம் 17 வயதுடைய தனது உறவுக்கார பெண்ணை திருமணம் செய்துகொண்டார். ஆனால் தற்போது அவர் கர்ப்பிணியான நிலையில் பிரசவத்திற்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால் அங்கு அவரது வயதை சரிபார்த்தபோது மைனர் பெண் என்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள் சாணார்பட்டி காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் காவல் சார்பு ஆய்வாளர்  ஜான்சன்ஜெயக் குமார், மகளிர் ஆய்வாளர் திலகா ஆகியோர் விசாரணை நடத்தி மைனர் பெண்ணை ஏமாற்றி திருமணம் செய்த ராஜாவை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

விவசாயிகளுக்கு சின்னவெங்காயம்  நடுதல் செயல் விளக்க பயிற்சி

வேடசந்தூர், செப்.23-  வேடசந்தூர் அருகே உள்ள நாகையகோட்டை ஊராட்சி ஆத்தூர்பிள்ளையூரில் தோட்டக்கலைத்துறை சார்பில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் கீழ் உழவர் உற் பத்தியாளர் குழு பயனாளிகளுக்கு சின்ன வெங்காயம் நடுதல் குறித்த பண்ணைப்பள்ளி பயிற்சி செயல் விளக்க பயிற்சி முகாம் நடந்தது. முகாம் தொடக்க விழாவிற்கு மாவட்ட செயல் அலுவலர் வேல்முருகன் தலைமை ஏற்றுப்பேசினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க ஒன்றிய தலைவர் சவட முத்து முன்னிலை வகித்துப்பேசினார். வட்டார அணித் தலைவர் தனம் வரவேற்றுப்பேசினார்.  முன்னோடி விவசாயி சவுந்திரபாண்டியன் பங்கேற்று சின்னவெங்காயம் நடுதல் முறையாக வளர்த்தால் அமோக விளைச்சல் பெறுவது சம்பந்தமாக செயல் விளக்கம் செய்து காண்பித்தார். தொழில்சார் சமூக அலுவலர் செம்மலர் நன்றி கூறினார். இம்முகாமில் சுற்றுப்புற கிராமப்பகுதிகளில் இருந்து ஏராளமாக விவ சாயிகள் பங்கேற்றனர்.

அருப்புக்கோட்டையில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி  காவல்துறை தீவிர விசாரணை

அருப்புக்கோட்டை, செப்.23- அருப்புக்கோட்டை பகுதியில் தொடர் திருட்டுச் சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வீட்டிற்குள் புகுந்து பெண்ணிடம் நகையைத் திருட முயன்ற மர்ம நபரை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர். அருப்புக்கோட்டையில் சின்னபுளியம்பட்டியில் உள்ள வடக்கு மகாராஜபுரம்  தெருவைச் சேர்ந்தவர் செண்பக ரத்தினம் (68). இவரது கணவர் இறந்து விட்ட நிலையில் தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில் வியாழனன்று  இரவு மர்ம நபர் ஒருவர் செண்பகரத்தி னம் வீட்டின் ஓடுகளைப் பிரிந்து உள்ளே இறங்கினார். பின்னர் தூங்கிக் கொண்டிருந்த செண்பகரத்தினம் கழுத்தை நெரித்து மிரட்டி அவர் அணிந்திருந்த நகையை பறிக்க முயன்றுள்ளார். அப்போது அவர் அபயக்குரல் எழுப்பவே,  அக்கம்பக்கத்தினர் திரண்டு வந்தனர்.  இத னால் அச்சமடைந்த கொள்ளையன் அங்கிருந்து தப்பி யோடிவிட்டான். இதுகுறித்து அருப்புக்கோட்டை காவல் நிலையத்தில்  புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீ சார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு மோப்ப நாயுடன் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  

சிறுமிக்கு பாலியல்  தொல்லை : வாலிபருக்கு  10 ஆண்டுகள் சிறை 

திருவில்லிபுத்தூர்,செப்.23- 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து போக்சோ நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீர்ப்பளித்தது. சாத்தூர் அருகே உள்ள நடுவப்பட்டி பகுதியைச் சேர்ந்தவர்  கணேசன்(30)இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு 17 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக வந்த புகார் அடிப்படையில் வச்சகாரப்பட்டி போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு  திருவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட போக்சோ நீதிமன்றத்தில்  நடைபெற்று வந்தது. இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை தீர்ப்பு வழங்கிய போக்சோ நீதிமன்ற நீதிபதி பூர்ணஜெய ஆனந்த், சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வாலிபர் கணேசனுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் ரூ. 7 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்ப ளித்தார். மேலும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பில் 5 லட்சம் நஷ்ட ஈடு வழங்க பரிந்துரை செய்து உத்தரவிட்டார்.

தரமற்ற உணவு விநியோகம்: அரசு பாலிடெக்னிக் கல்லூரி விடுதி மாணவர்கள் மறியல்

தேனி,செப்.23- ஆண்டிபட்டி அருகே தேக்கம்பட்டி பகுதியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் விடுதியில் காலை உணவு தரமற்றதாக கூறி கோபமடைந்த மாணவர்கள் சமையல் பாத்திரங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.   தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே உள்ள வருசநாடு சாலையில் தேக்கம்பட்டி பகுதியில் அமைந்துள்ளது அரசு பாலிடெக்னிக் கல்லூரி. இங்கு 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இங்கு படிக்கும் ஏழை மாணவர்களுக்கான விடுதி பந்துவார்பட்டி விலக்கு அருகே செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் தங்கி பயில்கின்றனர்.  இந்நிலையில்  வழங்கப்பட்ட பொங்கல், சாம்பார் உள்ளிட்ட உணவு பொருட்கள் தரமற்ற தாக இருந்ததாக கூறி 40க்கும் மேற்பட்ட மாணவர்கள் க.விலக்கு - வருசநாடு சாலையில் சமையல் பாத்திரங்க ளுடன் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அங்கு வந்த விடுதி காப்பாளர் ரவிச்சந்திரனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.  இதையடுத்து அங்கு வந்த க.விலக்கு போலீசார் மற்றும் விடுதி காப்பாளர் உள்ளிட்டோர் தொடர்ந்து பேச்சு  வார்த்தை நடத்தினர். இனி இது போன்ற தவறு நடக்காது என தெரிவித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர். 

பெட்டிக்கடைக்கு போதை பாக்குகள் சப்ளை செய்தவர்  மீது வழக்கு

திருவில்லிபுத்தூர்,செப்.23-  விருதுநகர் மாவட்டம, வத்திராயிருப்பு அருகே உள்ள சீல நாயக்கன்பட்டி ஊரில் மெயின் ரோட்டில் உள்ள பெட்டிக்கடையில் மாரீஸ்வரி என்ற பெண் ஒரு பையில் சில பொருட்களை வைத்து கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது நத்தம்பட்டி காவல் சார்பு ஆய்வாளர் ராஜு அவரை பிடிக்கச் சென்ற போது, தப்பி ஓடி தலைமறைவாகி விட்டார். அவர் கொடுத்த மஞ்சள் பையில் அரசால் தடை செய்யப்பட்ட மனித உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் போதை பாக்கு புகையிலையும் ரொக்கப் பணம் ரூ.7490 இருந்தது. இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்தனர். தலைமறைவான மாரிஸ்வரி என்ற பெண்ணை தேடி வருகின்றனர்.

அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவுக்கு பத்திரப்பதிவு  தேனி சார் பதிவாளர்  பணியிடை நீக்கம் உயர்நீதிமன்ற உத்தரவால் நடவடிக்கை

தேனி, செப். 23-  அங்கீகரிக்கப்படாத மனைப் பிரிவை பத்திரம் பதிவு செய்து அரசுக்கு வரு வாய் இழப்பு ஏற்படுத்திய தேனி பத்திரப் பதிவு அலு வலக சார் பதிவாளர்  பணி யிடை நீக்கம் செய்யப்பட்டார்.  வீரபாண்டியில் அங்கீக ரிக்கப்படாத மனைப் பிரி வில் வீட்டு மனையிடங்களை பத்திரம் பதிவு செய்ததில் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக பழனி செட்டிபட்டியைச் சேர்ந்த சரவணன் என்பவர்  உயர்நீதி மன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடுத்தார். இதனை விசாரித்த உயர்நீதி மன்றம், சம்மந்தப்பட்ட பத்தி ரப் பதிவுத் துறை அலுவ லர் மீது நடவடிக்கை எடுக்க வும், இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணை அறிக்கை சமர்பிக்கவும் அரசுக்கு உத்தரவிட்டது. உயர்நீதிமன்ற உத்தர வின் அடிப்படையில், வழக் கில் தொடர்புடைய தேனி சார் பதிவாளர் உஷாராணி யை தற்காலிக பணி நீக்கம் செய்து பத்திரப் பதிவுத் துறை ஐ.ஜி.,சிவன் அருண் அதிரடியாக உத்தரவிட்டார்.

திண்டுக்கல் ஆட்சியரகம் அருகே  குடிநீரின்றி தவிக்கும்  மூகாம்பிகை நகர் மக்கள் தொடர்ந்து மனு கொடுக்கப்பட்டும் கண்டுகொள்ளாத அதிகாரிகள்

திண்டுக்கல், செப்.23- திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அரு கேயுள்ள தாய் மூகாம்பிகை நகர் மக்கள் கடும் குடிநீர் பிரச்சனையை சந்தித்து வருகிறார்கள். ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு மனுக்கொடுத்தும் நடவ டிக்கை எடுக்கப்படாத அவலம் நீடிக்கிறது.  திண்டுக்கல் ஆட்சியர் அலுவலகம் எதிரில் 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது தாய் மூகாம்பிகை நகர். செட்டிநாயக்கன் பட்டி கிராம ஊராட்சிக்கு உட்பட்ட கிராமம் ஆகும். இப்பகுதி உருவாகி கிட்டத்தட்ட 30 ஆண்டுகளாகின்றன. 120 குடியிருப்புகள் உள்ளன. ஆனால் இந்த ஊரில் தீராத குடிநீர் பிரச்சனை. மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கே.பாலபாரதி தொகுதி மேம்பாட்டு நிதியி லிருந்து ஒதுக்கப்பட்ட நிதி யில் ஆழ் துளை கிணறு அமைக்கப்பட்டு 5 சின் டெக்ஸ் டேங்குகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.  இந்நிலையில் ஒன்றிய அரசின் குடிநீர்  திட்டத்தின் அடிப்படையில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் ரூ.3 ஆயிரம் ஊராட்சி நிர்வாகத்திற்கு கட்டப்படடது. ஆனால் தண்ணீர் கிடைக்கவில்லை. இதற்கிடையில் ஏற்கனவே குடிநீர் சப்ளை செய்யப்பட்டு வந்த ஆழ் துளை கிணற்று சின்டெக்சில் இருந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்ட தால் அந்த ஆழ்துளை கிணற்றிலிருந்தும் தண்ணீர் எடுக்க முடியவில்லை. இது தொடர்பாக திண்டுக்கல் மாவட்ட ஆட்சியரிடமும், திண்டுக்கல் ஊராட்சி ஒன்றி யத்தலைவரிடமும், தேர்ந் தெடுக்கப்பட்ட செட்டி நாயக்கன்பட்டி ஊராட்சி நிர்வாகத் தலைவரிடமும் புகார் மனு கொடுக்கப் பட்டும் எந்த அதிகாரியும், மக்கள் பிரதிநிதிகளும் கண்டு கொள்ளாத நிலை உள்ளது. இந்நிலையில் அப்பகுதி யில் வசிக்கும் மார்க்சிஸ்ட்  கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப் பட்ட ஒன்றியக்கவுன்சிலர் என். செல்வநாயகம் மற்றும் மற்றொரு சிபிஎம் ஒன்றியக் கவுன்சிலர் ஜீவா நந்தினி ஆகியோர்  ஒன்றி யக்குழுக் கூட்டத்தில் காலிப் பானையுடன் வந்து குடிநிர் கேட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடு பட்டனர்.  அப்போதும் அதி காரிகள் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்நிலையில் வியாழனன்று மீண்டும் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் என்.செல்வநாயகம் மனுக்கொடுத்தார்.  இது தொடர்பாக செல்வ நாயகம் கூறுகையில், குடி நீருக்காக மனுக்கொடுத்து மனுக்கொடுத்து ஓய்ந்தது தான் மிச்சம். தற்போது கொடுக்கப்பட்டுள்ள மனு மீது ஆட்சியர் உள்ளிட்ட அதி காரிகள் நடவடிக்கை எடுத்து எங்கள் குடிநீர் தாகத்தை தீர்ப்பார்கள் என்று நம்புகி றோம். அப்படி குடிநீர் கிடைக்கவில்லை என்றால் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றுவது, மக்களைத் திரட்டி சாலை மறியல் போ ராட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக நடத்துவோம் என்று தெரிவித்தார். (நநி)

மாணவர்களை கழிப்பறையை சுத்தம் செய்ய  வைத்த தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம்

திண்டுக்கல், செப்.23- நத்தம் அருகே மாணவர்களை கழிப்ப றையை சுத்தம் செய்ய வைத்த விவகாரம் தொடர்பாக அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி தலைமை ஆசிரியை பணி யிடை நீக்கம் செய்யப்பட்டார்.  நத்தம் கணவாய்ப்பட்டி வேலூரைச் சேர்ந்த ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளி யில் மாணவர்களைக் கொண்டு கழிப்பறை சுத்தம் செய்ததையடுத்து நீதிமன்ற உத்தர வின் கீழ் பள்ளியின்  தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.  திண்டுக்கல் மாவட்டம் நத்தம் ஒன்றி யத்திற்குட்பட்ட கணவாய்பட்டி வேலூர் பகுதியில்  ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது.  இந்த துவக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாக பி.அழகு என்ப வர் பணியாற்றி வருகிறார். இவர் இப் பள்ளி மாணவர்களைக் கொண்டு பள்ளி  கழிப்பறையை சுத்தம் செய்ய  நிர்பந்தித்த தாக கூறப்படுகிறது.  இதற்காக கழிவறையை சுத்தம் செய்த மாணவர்களுக்கு ரூ.10 வழங்கியுள்ளது தெரியவந்தது. மேலும் மாணவர்களை இரும்பு ஸ்கேல் கொண்டு அடித்ததாகவும் புகார் எழுந்தது. இப்பள்ளி யில் ஆசிரியர் அல்லாத பெண்ணை பாடம் நடத்த அனுமதித்துள்ளார். 3 மாணவர்க ளுக்கு பெற்றோர் கேட்டுக்கொள்கிற கடிதம் இல்லாமலே மாறுதல் சான்றிதழ் (டி.சி) வழங்கியுள்ளார்.   வாழ்நாளில் எங்கும் படிக்க முடியாது என மிரட்டியுள்ளார் என்ற புகார்களின் அடிப்படையில் கடந்த 19.9.2022 அன்று பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். மாவட்டக் கல்வி அலுவலகத்திலிருந்து இது தொடர்பாக ஆசிரியை அழகு வுக்கும், நத்தம் கல்வி வட்ட அதிகாரிக்கும்,  சென்னை துவக்கக்கல்வி இயக்குந ருக்கும், திண்டுக்கல்  முதன்மைக்கல்வி அலுவலருக்கும் நகல்கள் அனுப்பப் பட்டுள்ளன.   (நநி)


 

;