districts

img

அறிவியல் இயக்க மாநாடு: வழிகாட்டி ஆசிரியர் பயிற்சி

இராமநாதபுரம், செப்.21- தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இராமநாதபுரம் மாவட்டம் சார்பாக 30 ஆவது  தேசிய குழந்தைகள் அறிவி யல் இயக்க மாநாடு வழி காட்டி ஆசிரியர் பயிற்சி வகுப்பு  இராமநாதபுரம் ஸ்மார்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி யில் நடைபெற்றது.  அறி வியல் இயக்க மாவட்ட தலை வர் அய்யாசாமி தலைமை வகித்தார். மாவட்ட ஒருங் கிணைப்பாளர் சதக் அப் துல்லா வரவேற்றுப் பேசி னார். ஸ்வார்ட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் சிஎஸ்ஐ கல்வியியல் கல்லூரி முதல்வர்கள் சுகந்தி செல்வ ராஜ், ஏ.ஆனந்த் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இராமநாதபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்  பாலு முத்து துவக்க உரை யாற்றினார். அறிவியல் இயக்க மாநில செயலாளர் எஸ்.டி.பாலகிருஷ்ணன், உதவிப்பேராசிரியர் எம். கருணாகரன், அறிவியல் இயக்க மாவட்ட செயலா ளர் கு. காந்தி  மற்றும் பேராசி ரியர் ராமர் ஆகியோர் சிறப்பு ரையாற்றினர். அறிவியல் இயக்க மாவட்ட ஒருங்கி ணைப்பாளர் எம். பாலமுரு கன் நன்றி கூறினார்.