மதுரை, நவ. 23- சாத்தான்குளம் காவலர்கள் நான்குபேர் ஜாமீன்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். சாத்தான்குளத்தில் வியாபாரிகள் ஜெயராஜ், பெனிக்ஸ் உயிரிழந்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 போலீசார் மதுரை மத்திய சிறை யில் இருந்து வருகின்றனர். இதில் சாத்தான்குளம் காவலர் முருகன் ,வெயில் முத்து, தாமஸ் பிரான்சிஸ், முத்துராஜ் ஆகியோர் ஜாமீன் கோரி உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். அந்த மனுவில், சாத்தான்குளத்தில் தந்தை ஜெயராஜ், மகன் பெனிக்ஸ் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தற்போது மதுரை மத்திய சிறையில் இருக்கின்றோம்.
உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின்படி சிபிசிஐடி காவல்துறையினர் வழக்கை விசாரித்து தற்போது சிபிஐ காவல்துறையினர் விசாரித்து முடித்து விட்டனர். வழக்கு தொடர்பான ஆவணங்களை ஏற்கனவே தடய அறிவியல் துறை ,சிபிஐ அதிகாரிகள் சேகரித்து விட்ட நிலையில் விசாரணையும் முடிவடைந்து உள்ளது. எங்களுக்கு ஜாமீன் வழங்கும் பட்சத்தில் தலைமறைவாக மாட்டோம் என்றும், நீதிமன்றம் விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு கட்டுப்படுவோம் என்றும் உறுதி கூறு கிறோம்.
ஆகவே, இந்த வழக்கில் ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனர். விசாரணை ஒத்திவைப்பு இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன் திங்களன்று விசாரணைக்கு வந்தது . வழக்கில் விரிவான வாதம் செய்ய வேண்டும், மூத்த வழக்கறிஞர்கள் வர உள்ளதால் விசார ணைக்கு கால அவகாசம் வேண்டும் என மனு தாரர் தரப்பில் வேண்டுகோள் வைக்கப் பட்டது .இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை புதன் கிழமைக்கு ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தார்.